Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 April 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30859

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்து காந்தி நகரில் குப்பைகளை சேகாிக்க வண்டிகள் வருவதில்லை. குறிப்பாக பி.ஆா்.பி. நகர் 2-வது தெருவில் குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரிப்பது இல்லை. அருகே ஓடை இருப்பதால் பெரும்பாலானோர் ஓடையில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும், மூடாமல் உள்ள சாக்கடை கால்வாய்களை மூட வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரமேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30856

சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பைபாஸ் ரோட்டில் இருந்து பழைய கடைவீதி, பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சாக்கடை கால்வாய் அமைக்க சாலையை தோண்டி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. பழைய சாக்கடை கால்வாய்களை தோண்டி பாதியிலேயே விட்டதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீனிவாசன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30854

ஏரியை சீரமைக்க வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நாச்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளின் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அந்த ஏரியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி ஆகி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த ஏரியை சுத்தம் செய்து சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதிஸ்குமார், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30853

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் உள்ளன. மேலும் சின்ன எலசகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முத்துமாரியம்மன் கோவிலை கடந்துதான் செல்லவேண்டும். கோவில் முன்புறமுள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த சாலையை சீரமைத்துள்னர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30851

கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா?

மற்றவை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் வருகையை பதிவேற்றம் செய்வதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் வயதான நோயாளிகள் நீண்ட நேரம் நிற்க வேண்டியதாக நிலை உள்ளது. எனவே மருத்துவமனையில் கூடுதல் ஊழியர்களை நியமித்து புற நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரன். கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30850

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரி, பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் காலை, மாலை நேரங்களில் நகர பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் மாணவர்களும் பஸ்களில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30848

சேதமடைந்த சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 7-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்துகளிலும் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.-அரவிந்த்அப்பு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30844

சாலையில் மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஆச்சாரஅள்ளி கிராமத்தில் சாலையை ஒட்டி மின்கம்பம் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இந்த சாலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சண்முகம், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30842

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையம் அருகில் டாக்டர் பாட்ஷா தெருவில் உள்ள தனியார் லாட்ஜ் எதிரே பொதுமக்கள 2 சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் சாலை குறுகியதாக மாறி வருகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர். எனவே இங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?-சபீர், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30639

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

மோகனூர் பகுதிகளில் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில் செல்லும் போது அதன்மேல் ஊழியர்கள், வாழை தோட்டத்திற்கு வேலைக்கு வரும் நபர்கள் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இவ்வாறு ஊழியர்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?-அர்ஜூன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30638

வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படுமா?

சாலை

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. சந்தையின் முன்பு சில வியாபாரிகள் மண் தரையிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராமசாமி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30636

ஆபத்தான பள்ளம்

சாலை

நாமக்கல் மோகனூர் சாலையில் காந்தி நகரில் தண்ணீர் தொட்டி அருகில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் வயதானவர்கள், குழந்தைகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரும் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கவியரசு, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick