Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 April 2023 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31462

தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே அந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பாலுசாமி, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31461

கூடுதல் ஏ.டி.எம்.கள் தேவை

மற்றவை

நாமக்கல் ராசிபுரம், ஆண்டகளூர் கேட்டிற்கு அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அந்த பகுதிகளில் போதுமான ஏ.டி.எம். மையங்கள் இல்லை. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் ஏ.டி.எம்.கள் அமைக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செந்தில், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31460

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

மற்றவை

சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள 31-வது வார்டு பாண்டிய ராஜன் மற்றும் பார்க் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சுரேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31459

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

சேலம் மாவட்டம் தொட்டம்பட்டி பஞ்சாயத்து சொட்டையங்காடு பகுதியில் தாரமங்கலம் யூனியன் அலுவலகம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?-மணிகன்டன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31458

சேதமடைந்த பெயர் பலகை

மற்றவை

சேலம் மாநகராட்சி முள்ளுவாடி மக்கான் தெருவில் பெயர் பலகை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த தெருவுக்கு புதிதாக வருபவர்கள், தபால் காரர்கள் சிரமப்படுகின்றனர். இந்த பெயர் பலகை சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக பெயர் பலகை வைக்க வேண்டும்.-ராம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31457

சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்து

சாலை

சேலம் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தம் இருபகுதியிலும் சாலையில் ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த பகுதியில் தினமும் கிழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, ஜல்லி கற்கள் சிதறி பஸ்சுக்காக காத்திருப்போர் மீது விழுந்து அவர்களும் காயம் அடைகின்றனர். இந்த வழியாக தினமும் அரசு அதிகாரிகள் பயணிக்கத்தான் செய்கின்றனர். யாரும் இதனை கண்டுகொள்வது இல்லை. எனவே விபத்தால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31456

ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மஞ்சவாடி ஊராட்சியில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சான்றிதழ்கள் பெறவும், வீட்டுவரி ரசீது பெறவும், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளிகள், பயனாளிகள், தங்களது அரசின் நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் பெறவும் அலைக்கழிக்கபடுகிறார்கள். வேறொரு ஊராட்சியின் செயலாளர் இங்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் வருவதே இல்லை. இதனால் அவசர தேவைக்கு கையெழுத்து வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஊராட்சிக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31455

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா ?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பனந்தோப்பு மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் பழுதாகி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31454

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 6-வது வார்டில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31453

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது பில்பருத்தி கிராமம். இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜா, பில்பருத்தி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31452

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லை. எனவே கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பொன்னுசாமி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31451

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்த மின்சார துறையினர் உடனடியாக மின்சார கம்பியை உயர்த்தி கட்டியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-நவீன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick