Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 April 2023 2:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31616

தடையில்லா மின்சாரம் தேவை

மின்சாரம்

வெண்ணந்தூர் மற்றும் அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், மின்னக்கல், நாச்சிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் விசைத்தறி கூடம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மின்சாரம் ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறையில் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள், விசைத்தறி கூட உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.-பாபு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31615

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளில் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்கின்றனர். லாரியில் இருந்து திடீரென மூட்டைகள் சரிந்தால் தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரேசன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31612

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீட்டு வாசல்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-குமார், கொல்லப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31610

சாலையில் பள்ளம்

சாலை

பர்கூரில் இருந்து சிந்தகம்பள்ளி செல்லும் சாலையில் கோட்லேட்டி என்ற இடத்தில் தார் சாலை சேதமடைந்து 1 அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைகின்றனர். எனவே சாலையை தாமதம் இன்றி சீரமைக்க வேண்டும்.-மணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31608

அகற்ற வேண்டிய பேனர்கள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மின்சார கம்பங்களிலும், டிரான்ஸ்பார்மர்களிலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பேனா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31607

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி நகரில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானா அருகில் பெங்களூரு சாலை தொடங்கும் இடத்திலும், தியேட்டர் சாலை சந்திக்கும் இடத்திலும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரகாஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31605

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. மேலும் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் இருக்க போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சபரிராஜ், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31604

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதி கோபிநாதம்பட்டி கூட்ரோடு பழைய பாளையத்தில் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மையாக வைக்க வேண்டும்.-சந்துரு, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 1:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31593

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி பென்னாகரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருவழி சாலையாக உள்ள இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் மீது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?-கந்தசாமி, குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 1:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31584

மதுப்பிரியர்களின் கூடாரமான பஸ்நிலையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கே உடைப்பதும், சண்டையிடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற பிரச்சினை தொடர்ந்து இரவு நேரங்களில் நடந்து வருகிறது. எனவே மாரண்டஅள்ளி போலீசார், இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31464

சேதமடைந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலைகளில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31463

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே நடுப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick