Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 April 2023 6:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31887

மணல் லாரிகளால் விபத்து அபாயம்

போக்குவரத்து

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம், புதன் சந்தை, களங்காணி வழியாக லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு மணல் ஏற்றி செல்லும் லாரிகள், மணலை தார்பாயால் மூடி செல்வதில்லை. இதனால் காற்றடிக்கும் போது சாலையில் செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் மீது மணல் பறந்து வந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதனை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31875

பஸ்கள் இயக்கப்படுமா ?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்பத்திரி, தாலூகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பொதுமக்கள் பாப்பிரெட்டிப்பட்டிக்கு தான் வரவேண்டும். அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை. தர்மபுரியில் இருந்து வரும் பஸ்கள் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தோடு நின்று விடுகிறது. இதனால் தர்மபுரியில் இருந்து பட்டுகோணாம்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு பகுதிக்கு செல்லும் மக்கள் பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31871

ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் கரகதஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு ஆழ்துளை குழாய் பழுதாகி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் முன் ஆழ்துளை குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரகுபதி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31869

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை தூர்வாரி அதன் மேல் சிமெண்டு சிலாப்புகளளால் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-அரவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31868

சாலையில் பள்ளம்

சாலை

ஓசூர்- தளி சாலை அந்திவாடியில் உள்ள சோதனை சாவடி முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையின் நடுவே உள்ள பள்ளத்தினால் எதிர்பாராத விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை மூடி, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.சாக்கப்பா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31867

தாமதமாகும் கழிவுநீர் கால்வாய் பணி

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகர் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒரு மாதத்திற்கு முன்பு குழி தோண்டப்பட்டது. இதில் பாதி முடித்த நிலையில் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதில் வயதானவர்களும், குழந்தைகளும் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த கழிவு நீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31866

அகற்ற வேண்டிய செடி, கொடிகள்

குப்பை

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் குறிஞ்சி நகர் சாலையில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் பாம்பு, விஷப்பூச்சிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இந்த சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மீனா, ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31865

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் புதிதாக பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வர்த்தக கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேட்டு, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31864

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா 4 ரோடு சந்திப்பில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, பெங்களூரு, தர்மபுரி செல்லும் புறநகர் பஸ்கள், கார், லாரிகள் சென்று வருகின்றன. சாலையோர கடைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வருவோர் நெடுஞ்சாலை ஓரம் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ரவுண்டானா 4 ரோடு சந்திப்பில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும்.-சுதாகரன், ஊத்தங்கரை,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31621

பழுதடைந்த குடிநீர் நிலையம்

பழுதடைந்த குடிநீர் நிலையம்தண்ணீர்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்தநிலையில் அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 7 நாட்களாக பழுதடைந்து காணப்பகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமுக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும்.-தீபக்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31619

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள 31-வது வார்டு பாண்டிய ராஜன் மற்றும் பார்க் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சுரேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31618

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் - சூரமங்கலம் சாலையில் பவளத்தானூர் ஏரி, அழகுசமுத்திரம் பஸ் நிறுத்தம், இரட்டை கரடு ஆகிய பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் தூர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பக்தவத்சலம், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick