Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 April 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31450

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூரில் பெங்களூரு- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் இருந்து லட்சுமிதேவி நகர், பிருந்தாவன் நகர் பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதடைந்து உள்ளது. இந்த பகுதி வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. சேதமடைந்த சாலையால் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.- பிரகாஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31449

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டனப்பள்ளியில் இருந்து தேசிப்பள்ளி வழியாக காட்டூர் செல்லும் தார்சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பசுபதி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31272

காலதாமதமாகும் பணி

கழிவுநீர்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் நுழைவு வாசல் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில் பணி விரைவாக நடைபெறாமல் காலதாமதம் ஆகி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?-சித்ரா ரவி, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31271

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வகுரம்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து சிங்கிலிபட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சி கழிவு பொருட்கள் நாள்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தொற்று நோய் மக்களுக்கு ஏற்படும் சூழலும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக கவனித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜயன், சிங்கிலிப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31270

நிழற்கூடம் வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளைப் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்ைல. இப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள் என பயணிகள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருந்து செல்கின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.-செல்வம், வெள்ளைப்பிள்ளையார் கோவில், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31269

விபத்துகளை தடுக்க தடுப்புகள் தேவை

சாலை

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் கைலாசநாதர் தேரோட்டம் காரணமாக நங்கவள்ளி மற்றும் சங்ககிரி சாலையை இரண்டாக பிரிக்கும் தடுப்புகளை அகற்றிவிட்டனர். தேரோட்டம் முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தடுப்புகள் வைக்கவில்லை. இதனால் முதியவர்கள், மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் சாலையை கடக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் தடுப்புகள் வைக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பக்தவச்சலம், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31268

பாத்திரம் கழுவும் இடமாக மாறிய தண்ணீ்ர் தொட்டி

பாத்திரம் கழுவும் இடமாக மாறிய தண்ணீ்ர் தொட்டிதண்ணீர்

சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகள், டிரைவர்கள் பயன்பாட்டிற்காக 2 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அதனை சுற்றி ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. ஓட்டலில் சாப்பிடுபவர்கள் அந்த தண்ணீர் தொட்டியில் கைகளை கழுவுகிறார்கள். மேலும் குப்பைகளை அங்கேயே போடுகிறார்கள். மற்றொரு தண்ணீர் தொட்டியின் அருகே பாத்திரங்களை கழுவுகிறார்கள். இதனால் பயணிகள் தண்ணீர் குடிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே இதனை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31249

சேதமடைந்த சிக்னல் கம்பம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதமடைந்து பல நாட்களாக சாலை ஓரம் கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை அதிவேகமாக கடக்கின்ற வாகனங்கள் சிக்னல் இல்லாததால் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சிக்னல் கம்பத்தை சரி செய்ய நடவடிக்ைக எடுப்பார்களா?-பாஸ்கர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31247

வாகன ஓட்டிகள் அச்சம்

போக்குவரத்து

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படவில்லை. இதனால் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றன். எதிர்பாராதவிதமாக விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்தை ஒழுங்குசெய்ய சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.-நாகராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31245

மண்சாலையாக மாறிய தார்சாலை

சாலை

ஊத்தங்கரை ஒன்றியம் மகனூர்பட்டி ஊராட்சி திருப்பத்தூர் சாலையில் இருந்து தாவூத் கொட்டாய் வழியாக உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர் வரை செல்லும் சாலையில் தார்கள் பெயர்ந்து கரடு முரடான மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடனடியாக இந்த மண்சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணாயிரம், மகனூர்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31243

சிக்னல் விளக்கு தேவை

போக்குவரத்து

பர்கூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி-திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள ஒப்பந்தவாடி கூட்ரோட்டில் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில் சிக்னல் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு சிக்னல் விளக்குகள் தேவை என்பதால் உடனடியாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலு, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31242

அடிக்கடி மின்தடையால் அவதி

மின்சாரம்

அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் மின் அழுத்த குறைபாட்டால் சீராக மின்வினியோகம் நடைபெறவில்லை. இதனால் மின் மோட்டார்கள் பழுதடைவதால் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 6 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயன் இல்லை. எனவே சீராக மின் வினியோகம் செய்திட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick