Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 April 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31240

திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4 ரோடு அருகே உள்ள பிள்ளையார் கோவில் எதிரே திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும்.-சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31238

தார்சாலை அமைக்க வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மஞ்சவாடி ஊராட்சி சின்ன மஞ்சவாடி கிராமத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி-சேலம் மெயின் ரோட்டில் இருந்து செல்லும் சாலை ேசதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக உள்ளது. உள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-சங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31044

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க 6 கிலோ மீட்டர் தூரம் சென்று வாங்கி வருகின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்த், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31043

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் நடுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவேந்திரர் தெரு பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் ஏரிக்கரை தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.-பூபதி, நடுப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#31042

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,-ராஜா, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#31041

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் பெரமனூர் 40 அடி ரோட்டில் சாலை அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் தோண்டப்பட்டது. சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது அந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-அம்பேத்கர், பெரமனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31039

தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் அஸ்தம்பட்டி சுப்புராயன் லேஅவுட் பகுதியில் சாக்கடை கால்வாயை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள், கால்வாய் அமைப்பதற்காக தோண்டிய குழியில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரவி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31037

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் கோரிமேடு-ஆத்துக்காடு செல்லும் சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளன. மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பொது மக்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ் குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#31034

சாலையில் தேங்கும் மழைநீர்

மற்றவை

சேலம் மாவட்டம் இலக்கியம்பட்டி பரமசிவகவுண்டர் தெருவில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சரவணன், இலக்கியம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31033

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூர் பழைய பேட்டையில் இருந்து ஆத்தோர வீதி வரை, பஸ் நிலையத்தில் இருந்து வர்ண தீர்த்தம் கே.கே. நகர் வரை மற்றும் அரூர் ஏரியில் இருந்து பஸ் நிலையம் ஈஸ்வரன் கோவில் வரை செல்லும் கால்வாயை வியாபாரிகள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 15 ஆண்டுகளாக பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா ?-இஸ்மாயில், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31031

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கரகதஅள்ளி ஊராட்சி கடமடை ஹவுசிங்போர்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இப்பகுதியில் 16 தெருவிளக்குகள் கடந்த 2 ஆண்டுகளாக எரியவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் கடமடை ஏரியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பொதுமக்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31030

மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா ?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் இருந்து கம்பைநல்லூர், காரிமங்கலம், பெரியாம்பட்டி, பாலக்கோடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பஸ்கள் சென்றன. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வழியாக பஸ்கள் செல்லவில்லை. அந்த வழியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த ஊர்களில் வசிக்கும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மீண்டும் அந்த வழியாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஸ்வா, அரூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick