Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jun 2023 3:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33893

சேதமடைந்த கழிப்பிடம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடி கிராமத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிட கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-அண்ணாமலை, பெரிய தள்ளப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33892

செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பென்னாகரம் போலீசார் சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல் உள்ளது. இதனால் குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?-திவாகர், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33891

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசப்பட்டு கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை பேரூராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய பேரூராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.-அரவிந்த்அப்பு, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33890

நோய் பரவும் அபாயம்

குப்பை

தர்மபுரி மாவட்டம் அரூர் வ.கலைஞர் நகர் வர்ணத்தீர்த்தம் பகுதியில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் உடைந்து அதன் அருகில் இருந்த குடிநீர் குழாயுடன் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள்?-குமார், அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33889

சுகாதார வளாகம் வேண்டும்

கழிவுநீர்

தர்மபுரி நகராட்சி 25-வது வார்டு எஸ்.வி. ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சுகாதார வளாகம் இல்லை. இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்தி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33746

மூங்கில் மரங்களை அகற்றலாமே

மூங்கில் மரங்களை அகற்றலாமேசாலை

கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சமீபத்தில் வனத்துறையினர் மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அப்போது சில காய்ந்த மூங்கில் மரங்களை அங்குள்ள சாலையோர மரத்தின் மேல் போட்டு வைத்திருப்பதால் அந்த மரம் முறிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. எனவே அதனை அகற்ற வேண்டும் என மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-நிவாஸ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33743

புதர் மண்டிய மைதானம்

புதர் மண்டிய மைதானம்மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் செம்மாண்டப்பட்டி ஊராட்சி காணாம்பாளையம் குடித்தெரு பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பயன்படாத வகையில் புதர் மண்டி கிடக்கிறது. இப்பகுதி குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மீண்டும் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-வீரா, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33741

நீண்ட வரிசையில் வாகனங்கள்

நீண்ட வரிசையில் வாகனங்கள்போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சேலம், சங்ககிரி செல்லும் வாகனங்கள் மற்றும் திருச்செங்கோடு சாலையில் செல்கின்ற வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் பஸ் நிலைய நான்கு ரோட்டில் செல்லும்போது போக்குவரத்து தடை ஏற்பட்டு நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஓரிரு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தவிாக்க மாற்று ஏற்பாடு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33738

விபத்து அபாயம்

கழிவுநீர்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையின் ஓரத்தில் பள்ளம் உள்ளது. பள்ளத்தை மறைப்பதற்காக சாலையின் ஓரத்தில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் அதிக வாகன போக்குவரத்தால் இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வழியாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையில் உள்ள பேரிகார்டை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33735

சாலையில் குப்பை தொட்டி

சாலை

சேலம் அண்ணா பூங்கா எதிரே ஓமலூர் மெயின்ரோட்டில் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியால் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டியை வேறு இடத்்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தசரதன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33734

புழுதி பறக்கும் சாலை

புழுதி பறக்கும் சாலைசாலை

சேலம் சுந்தர் லாட்ஜில் இருந்து முள்ளுவாடி கேட் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகே செல்லும் சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், புழுதி பறப்பதாலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தோடு சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க முன்வரவேண்டும்.-முகமது, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33732

தெருவிளக்கு அவசியம்

மின்சாரம்

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 1-வது வார்டு சாய்பாபா அவென்யூ-2 பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இதுநாள் வரை தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அவசியம் அமைத்து தர வேண்டும்.-ஆனந்தகுமார், கன்னங்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick