Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 May 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33729

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

ஏரியூர் பகுதியில் டெம்போ வாகனங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் டெம்போ வாகனத்தில் தொங்கியபடி செல்கின்றனர். அசம்பாவிதங்கள் நேரும் முன்பு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேட்டு, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33726

பள்ளியில் குவிந்த குப்பைகள்

பள்ளியில் குவிந்த குப்பைகள்குப்பை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் கழிவறை பகுதியையொட்டி அதிக அளவிலான குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளியில் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-தினேஷ், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33724

எப்போது புதிய பஸ்நிலையம்

எப்போது புதிய பஸ்நிலையம்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையம் ரூ.4½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த கட்டுமான பணி நடந்து வருகிறது. எனவே தாமதமாக நடைபெற்று வரும் பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.-பற்குணம், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33722

சுகாதார கேடு

சாலை

ஓசூரில் 10-வது வார்டு, அலசநத்தம் கிராமத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமான சாலைகள், சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், குப்பை கூளங்கள் என சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாலைகளை புதுப்பித்து தூய்மையாக வைக்க அவசியம் நடவடிக்கை தேவை.-சிவா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33721

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு, கே தியேட்டர் ரோடு பெங்களூரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. நடந்து செல்பவர்கள் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காய்கறி சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33718

சாலையில் பெரிய பள்ளம்

சாலை

ஓசூரில் பாகலூர் ரோடு சர்க்கிள் அருகே நகைக்கடை எதிரில் பாகலூர் நோக்கி செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக மிகப்பெரிய பள்ளம் உள்ளது. நகரின் முக்கிய பகுதியாகவும், 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த சாலையில் இவ்வாறு பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் எதிர்பாராத வகையில் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜய், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33717

ஆக்கிரமிக்கப்பட்ட ராஜ்கால்வாய்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி மேல்கோட்டாய் ஏரியின் உபரிநீர் ராஜ்கால்வாய் உற்பத்தியாகி காந்திநகர், இந்திரா நகர், பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக போலீஸ் நிலையம் அருகே சாலையை கடந்து ஜெகதேவிரோடு வழியாக பாம்பாற்றில் கலக்கிறது. இந்த கால்வாய் பகுதிகளை பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#33528

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் கந்தம்பட்டியில் இருந்து இளம்பிள்ளைக்கு செல்லும் சாலையில் தினமும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. இந்த சாலை முன்பு அகலமாக இருந்தது. தற்போது சிவதாபுரம் முதல் பனங்காடு பகுதி வரை இருபுறமும் சாலை ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், சிவதாபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33527

ஏரி தூர்வாரப்படுமா?

மற்றவை

சேலம் சூரமங்கலத்தை அடுத்து போடிநாயக்கன்பட்டி ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரி முழுவதுமாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேறும், சகதியுமாக, ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து உள்ளது. மேலும் அருகே உள்ள பகுதிகளிலிருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆகாயத்தாமரைகளை அகற்றி ஏரியில் கழிவுநீர் கலக்காதவாறு தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#33526

சேதமடைந்த கம்பி

மற்றவை

சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டி மேம்பாலம் அருகே பழைய சூரமங்கலம் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை நுழைவாயிலில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேல் கம்பி வளையம் போடப்பட்டுள்ளது. இந்த கம்பி வளையம் தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33525

பூங்கா பராமரிக்கப்படுமா?

பூங்கா

சேலம் அன்னதானப்பட்டி 49-வது வார்டு தம்மண்ணன் தோட்டத்தில் உள்ள விளையாட்டு பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுவர்கள், பெரியவர்கள் அந்த பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா ?-ரமேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33524

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அளவாய்பட்டி முனியப்பன் கோவில் பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலை வரை 5 வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்பட்டது. அதற்கு வெள்ளை வர்ணம் பூசாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோபாலகிருஷ்ணன், அளவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick