Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 May 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33523

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பாலாஜி நகர் பகுதியில் மின்கம்பிகள் செல்லும் வழியில் செடி, கொடிகள் உயரமாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த செடி, கொடிகளை அகற்ற மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-லோகநாதன், பரமத்தி வேலூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33522

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்த கனமழையில் அடித்த காற்றில் கிராயூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதில் பேட்டபாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த மரத்தை அகற்றி கழிவு நீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33516

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பஸ் நிலையத்தில் இருந்து சேலம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளுக்கு 50 -க்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கிறது. இதேபோல் பொம்மிடி வழியாக தினமும் 100-கும் மேற்பட்ட வாகனங்கள், செல்கிறது. மெயின் ரோட்டில் இருந்து பஸ்நிலையம் உள்ளே செல்லும் பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-டோமினிக், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33513

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறநகர் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால் பஸ்கள் அனைத்தும் நகர பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஅள்ளி, அஞ்செட்டி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் நகர நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகிறது. மேலும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்தோஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33510

ஆபத்தான பள்ளம்

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- ராயக்கோட்டை சாலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மீண்டும் மூடப்படவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33509

சாலையின் நடுவே மின்கம்பம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா நொச்சிப்பட்டியில் இருந்து மண்ணாடிப்பட்டி செல்லும் சாலையின் அருகில் உள்ள தெருவில் சாலையின் நடுவே மின்சார கம்பம் உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தை அகற்ற மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், நொச்சிப்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33508

பூட்டி கிடக்கும் கண்காணிப்பு அறை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்றசம்பவங்களை கண்காணிக்க சூளகிரி ரவுண்டானாவில் போலீசார் சார்பில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா அறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அறை பூட்டியே உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கண்காணிப்பு அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-சக்தி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33507

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சூளகிரி அருகே அத்திமுகம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் கோழிகளையும், ஆடுகளையும் தெருநாய்கள் கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்..-ஜெய், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2023 9:44 AM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33340

தெருநாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டுகின்றன. இதனால் சிலர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2023 9:44 AM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33339

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர் வரை சாலையில் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-லட்சுமி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33338

நிழற்கூடம் வேண்டும்

நிழற்கூடம் வேண்டும்போக்குவரத்து

சேலம் எருமாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அத்தியாவசி பொருட்கள் வாங்க செல்கின்றனர். அங்கு அவர்கள் வெயிலில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். இதன் காரணமாக முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33337

பெயர் பலகை வைக்கப்படுமா?

பெயர் பலகை வைக்கப்படுமா?மற்றவை

சேலம் மரவனேரி கோர்ட்டு கே.ஏ.ஏ.எஸ். நகர் 3-வது தெருவின் பெயர் பலகை எழுத்துகள் அழிந்து காணப்படுகிறது. இதேபோல் கே.எஸ்.ஆர். நகர்-6 தெருக்களுக்கும் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 தெருக்களுக்கும் ஸ்மார்ட் சிட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், மரவனேரி, சேலம்-7.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick