Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36344

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளிக்கு செல்லும் தார் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மூர்த்தி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36343

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகில் இருந்து நியூ ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முரளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36342

கழிவறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ்நகரில் மகளிர் கழிப்பறை கட்டிடம் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்படுகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மணிகண்டன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36340

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது. இந்த மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்விளக்கை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36339

பெயர் பலகை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் அச்சமங்கலம் கூட்ரோட்டில் பெயர் பலகை உரிய இடத்தில் வைக்காமல் சாலையோரம் உள்ள தனியார் கிரானைட் தொழிற்சாலை அருகில் தலைகீழாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகையை சரியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36185

விளையாட்டு மைதானம் தேவை

மற்றவை

சேலம் தம்மம்பட்டி பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த பேரூராட்சியில் விளையாட்டு மைதானம், பூங்கா என எதுவும் இல்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அரசுக்கு சொந்தமான இடத்தை உரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அந்த இடத்தில் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.-அக்பர் அலி, தம்மம்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36184

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட மன்னார்பாளையம் பிரிவில் உள்ள வர்மாசிட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் வீட்டை வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேந்திரன், மன்னார்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | ஆத்தூர்
#36183

தெருநாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் விநாயகபுரம் பகுதி தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த தெருநாய்கள் ரோட்டில் செல்பவர்களை குரைப்பது, விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சில நாய்கள் வெறிபிடித்து கடிக்க செல்கின்றன. சாலைகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், பள்ளி மாணவர்களை அச்சுறுத்துகின்றன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36182

போக்குவரத்து சரி செய்யப்படுமா?

போக்குவரத்து

வெண்ணந்தூர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சப்பையாபுரம் வரை சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-தனபால், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36181

போலீசார் ரோந்து செல்வார்களா?

மற்றவை

பள்ளிபாளையம் ஜீவா செட்டு பகுதியில் அதிகாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. அந்த பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும் மதுபிரியர்கள் பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் கடந்து கொள்கிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து செல்வார்களா?-பிரபு, பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36180

புதிய தார்சாலையால் சிரமம்

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியம் நடுப்பட்டி செல்லும் சாலை வெள்ளைபிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி தேவேந்திரர் தெரு வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் பழைய அளவைவிட உயர்த்தி தார்சாலை அமைப்பதினால் மழைக்காலங்களில் பலரது வீடுகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை உயர்த்தாமல் பழைய அளவிலேயே தார்சாலை அமைக்க வேண்டும்.-செல்வம், நடுப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36178

வாகன சோதனையால் விபத்து

போக்குவரத்து

பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆய்வுக்காக நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாகன ஆய்வுகள் மேற்கொள்வதை தவிர்த்து மாற்று இடத்தில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணி, பரமத்திவேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick