Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36587

திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டில் ரேஷன்கடை அருகில் திறந்த வெளியில் கழிவுநீர் கல்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அரவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36374

சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் மெய்யனூர் சாலையில் சாக்கடை வசதி இல்லாமல் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கொசு தொல்லையும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணி, மெய்யனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36372

கெடிகாரம் சீரமைக்கப்படுமா ?

மற்றவை

சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கெடிகாரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த கெடிகாரத்தின் இருபுறமும் காட்டப்படும் நேரம் பல மாதங்களாக தவறாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைத்து சரியான நேரத்தை காண்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36371

பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

மற்றவை

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா கன்னங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை பெய்யும் போது பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடம் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.-ஆதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36369

"தினத்தந்தி"க்கு நன்றி

ட்ரெண்டிங்

சேலம் வடக்கு பொன்னம்மாபேட்டை 34-வது வார்டு கார்பெட் தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி உள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அதனை சுத்தப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.-மனோ, பொன்னம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36367

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மலை வேப்பன்குட்டை கிராமத்தின் அருகில் ஆனாங்காடு, குட்டையூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பழனி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36366

மினி பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உத்திரகிடி காவல் ஊராட்சியில் அமைந்துள்ளது வெட்டுக்காடு கிராமம். அந்த கிராமம் நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. அங்குள்ள மலை வேப்பன்குட்டை பகுதிக்கு செல்ல குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்று வருகின்றனர். எனவே அப்பகுதிக்கு மினி பஸ்கள் இயக்கப்படுமா?-பசுபதி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36362

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரஞ்சிதா, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36361

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

குப்பை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திண்ணனூர் நாடு ஊராட்சியில் படகு இல்லம் அருகில் நரியன் கிணறு கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. அந்த சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் காற்று அடிக்கும் போது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேகர், செம்மேடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36350

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி ஒட்டப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ்பகுதி சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36348

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டில் பாரதிதாசன் தெருவில் வாரக்கணக்கில் குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக பஸ்நிலையம், வாரச்சந்தை, கோவில் மற்றும் பள்ளிக்குச் செல்வோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வி, பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36346

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரெட்டியூர் சுடுகாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர்த்்தேக்க தொட்டி சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரவி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick