Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36604

மதுபிரியர்களால் ஆபத்து

மற்றவை

சேலம் குரங்குசாவடி முதல் அண்ணா பூங்கா வரை ஈரடுக்கு மேம்பாலம் செல்கிறது. இரவு நேரத்தில் பாலத்தின் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். போதை தலைக்கு ஏறிய சிலர் பாட்டில்களை பாலத்தின் மேலிருந்து கீழேயும் தூக்கி வீசுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இதை தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.-ஜோசப், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36603

அடிப்படை வசதிகள் இல்லாத காவேரிநகர்

மற்றவை

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் 23-வது வார்டில் காவேரி நகரில் சாக்கடை, குடிநீர் வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பூங்கா செடி கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் வசிக்கும் இடமாக மாறி வருகிறது. இதை சீர்படுத்தி, சிறுவர்கள் விளையாடும் இடம், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே கவனிப்பார் இல்லாத காவேரி நகரில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடிப்படை தேவைகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36601

புதருக்குள் நிழற்கூடம்

மற்றவை

மோகனூர் ஒன்றியம் அரூர் ஊராட்சி பகுதியில் வடிவேல் கவுண்டன் புதூர் செல்லும் பிரிவு ரோடு அருகே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. தற்போது அந்த நிழற்கூடத்தில் முட்கள் வளர்ந்து பயனற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பயணியர் நிழற்கூடத்தை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து முள் செடிகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?-குப்பராஜ், வளையப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36600

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

வெண்ணந்தூர் அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே உயர் கோபுர மின்விளக்கு கடந்த பல மாதங்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.-ரஞ்சிதா, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36598

மினிபஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு கிராமம், நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்ல காலை நேரங்களில் மட்டும் பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பஸ் வசதி கிடையாது. இதனால் வெட்டுக்காடு மெயின் ரோட்டில் இருந்து மலைவேப்பன் குட்டைக்குள் செல்ல சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர். எனவே அந்த குறையை போக்க அப்பகுதியில் மினி பஸ்கள் இயக்கப்படுமா? என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து உள்ளனர்.-மணி, வெட்டுக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36597

சாலை பணி தாமதம்

சாலை

சேந்தமங்கலத்தை அடுத்த மலை வேப்பன்குட்டை கிராமத்தின் அருகே ஆனாங்காடு, குட்டையூர் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு வருடமாக லாரிகளில் மண் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 10 லாரிகள் செல்கின்றன. இதனால் கிராமத்திற்குள் செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மலைவேப்பன் குட்டை கிராமத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்க 6 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அவ்வழியே செல்லும் மண் லாரிகள் நிறுத்தப்பட்டால் தான் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36594

மண் சாலையான தார்சாலை

சாலை

ஊத்தங்கரையை அடுத்த முசிலிக் கொட்டாய் கிராமத்தில் இருந்து உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர்- நரிக்கானூர் இணைப்பு சாலை வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதோடு மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.-கார்த்திகேயன், முசிலிக் கொட்டாய் , கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36593

மீண்டும் பஸ் சேவை தேவை

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை மதியம் 12.30 மணி, இரவு 7.30 மணி ஆகிய இருமுறை டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது அந்த டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் மீண்டும் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தருமன், தொட்டிபள்ளம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36592

போலீசார் ரோந்து செல்வார்களா?

மற்றவை

பர்கூரை அடுத்த கந்திகுப்பம் ரேஷன் கடையின் முன்பு இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த வழியாக இரவு நேரத்தில் போலீசார் ரோந்து சென்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-குமார், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36591

தெருநாய்கள் அட்டகாசம்

மற்றவை

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகிறது. இரவு, பகல் பாராமல் சாலையில் செல்வோரை துரத்தி வருகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்களை பிடிக்க வேண்டும்.-கந்தசாமி, குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36590

பாழடைந்த சுகாதார வளாகம்

மற்றவை

ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளியில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்து உள்ளது. அதன் அருகிலேயே ஊராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சுகாதார வளாகத்தை புதுப்பிக்க முன் வரவேண்டும்.-தர்ஷன், ராமகொண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36588

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெரு, ஸ்தூபி மைதானம், எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அலுவலகங்களுக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick