Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36792

பகல் நேரத்திலும் எரியும் மின்விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் இருந்து அலவாய்மலை செல்லும் வழியில் முக்கட்டான்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்குகள் பகல் நேரத்திலும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பகல் நேரத்தில் எரியும் மின்விளக்குகளை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆதவ், ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36791

செடி, கொடி அகற்றப்படுமா?

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை அலுவலக கட்டிடங்கள் உள்ளன. இதன் மேல் சுமார் 4 அடி உயரத்திற்கு செடி, கொடி வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு, விஷ பூச்சிகள் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?-சின்னப்பன், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36790

விபத்து அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை சுற்றி பார்க்க செல்லும் இளைஞர்கள் பலர் சேந்தமங்கலம் மெயின் ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சற்று அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே வார இறுதி நாட்களில் சுற்றுலாவாக வரும் இளைஞர்கள் வாகனங்களை சேந்தமங்கலத்திற்கு முன்னதாகவே மாற்று வழியில் திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரகாஷ் சூர்யா, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36739

குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தொப்பூர் ஊராட்சி ராமதாஸ் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் பஞ்சாயத்து குடிநீர், ஒகேனக்கல் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பழுதாகி உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பழுதான மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36738

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 7-வது வார்டு யாதவர் தெருவில் சிமெண்டு சாலை சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-செல்வம், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36737

வேகத்தடை அமைக்கலாமே!

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் இருந்து பஸ்நிலையம் பாலம் வரை செல்லும் சாலையில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் வேகத்தடைகள் அமைத்து ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-காதர் பாஷா, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36736

வீணாகும் குப்பை தொட்டிகள்

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் நகர் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே சாலைகளில் கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஏரியூர் கடைவீதி, நகர் பகுதிகளில் குப்பை தொட்டிகளை வைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாலை ஓரம் குப்பை தொட்டிகளை வீசி உள்ளனர். இதனால் இந்த குப்பை தொட்டிகள் துருப்பிடித்து, வீணாகும் நிலையில் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டிகளை பயன்படுத்தி முறையாக குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36735

ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே தர்கா பகுதியில் சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்து ஏரி நீரே, கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பரவி உள்ளது. இதனால் ஏரிநீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றி ஏரிநீர் மாசு அடையாமல் பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி. ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36734

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பண்ணப்பள்ளி கிராமத்தில் தீர்த்தம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்தோஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36732

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகராட்சி சேலம் ரோடு, சென்னை சாலை, பெங்களூரு ரோடு, சப்-ஜெயில் ரோடு பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்கள் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் அவர்கள் வெளிளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மைதீன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 2:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36729

கால்நடைகளால் இடையூறு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பசுமாடுகளும், ஆடுகளும் சுற்றி திரிகின்றன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த கால்நடைகளை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- மஞ்சுநாத், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36605

தாமதமாகும் பணிகள்

மற்றவை

சேலம் மாநகராட்சி 42-வது வாா்டு சத்தியமூர்்த்திநகர் பாவடி பெண்கள் பள்ளி அருகில் திட்ட பணிகளுக்காக பெரிய குழி தோண்டப்பட்டது. தற்போது அந்த பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த குழியில் மாணவிகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே பள்ளி மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.-பாலாஜி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick