Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36963

பெயர் பலகை வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு பாதை வருகிறது. அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனங்களில் செல்பவர்கள் இந்த பாதை வழியாக தவறி ஆதிதிராவிடர் காலனிக்குள் நுழைந்து விடுகிறார்கள். எனவே மாரியம்மன் கோவில் எதிரில் அரூர் மற்றும் அதிகாரப்பட்டி செல்லும் சாலை என்று பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36962

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

சாலை

நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் சந்திப்பு சாலையில் இருந்து, சிவாடி ரெயில் நிலையம் வரை உள்ள தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஸ்ரீராம், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36961

கழிவுநீர் கால்வாய் தேவை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சி பகுதியில் சில இடங்களில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கின்றது. அதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த பகுதியில் விரைவாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#36960

அடிக்கடி விபத்து

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நாகமரை மேச்சேரி இணைப்பு சாலையான இந்த மூன்று சாலை இணையும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் அருகில் அரசு மருத்துவமனையும், போலீஸ் நிலையமும் இருப்பதால் மக்கள் தொகை அதிகமாக காணப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.-சந்தோஷ் இந்திரா நகர்,ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36959

தெருவிளக்கு அவசியம்

மின்சாரம்

ஓசூர் - பாகலூர் சாலையில் காளேஸ்வரத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் பிரதான சாலையில் இருந்து, குடியிருப்பு உள்ளே செல்லும் வழியில் தெருவிளக்குகள் இல்லாததால், மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக மதுபிரியர்கள் சிலா் மது அருந்துவது போன்ற செயல்களும், சமூகவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் குடியிருப்பு மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தெருவிளக்குகளை உடனடியாக அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டும்.-கலையரசன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36958

இடிந்து விழுந்த நூலகம்

மற்றவை

தேன்கனிக்கோட்டை தாலுகா தளி பஸ் நிலையத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்நிலையில் தளி பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக நூலகம் மீது மோதியது. இதில் நூலகத்தின் முன்புற கதவு உடைந்து விழுந்து கட்டிடம் சேதமாகியுள்ளது. இதனால் அங்கிருக்கும் புத்தங்களை எடுத்து தற்காலிகமாக நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.-தங்கராஜ், தளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#36957

சாலையின் நடுவே மின்கம்பம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 2-வது வார்டு நேரல கோட்டை கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு என மயானத்திகு செல்லும் சிமெண்டு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ்சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் மயானத்திற்கு உடல்களை அடக்கம் செய்ய செல்லும்போது மிகவும் சிரமமாக உள்ளது. செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே சேதமான சாலையை சீரமைத்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றவும், செடி, கொடிகளை பிடுங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36798

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

சேலம் ஊராட்சி ஒன்றியம் வட்டமுத்தாம்பட்டி காமராஜர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதையொட்டி குடிநீர் கிணறு உள்ளது. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீரும் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சித்தன், வட்ட முத்தாம்பட்டி, சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36797

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சேலம் மேற்கு நாராயணபிள்ளை தெருவில் மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது அந்த மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த குடிநீர்தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இதன் காரணமாக அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதனையும் சரிசெய்து தரவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மோட்டாரையும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36796

மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை

மின்சாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நங்கவள்ளி மெயின் ரோடு, தொளசம்பட்டி பிரிவு சாலை பகுதிகளில் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அதில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. எனவே இந்த மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36795

குப்பை தொட்டி வைக்கப்படுமா?

குப்பை

சேலம் மாநகராட்சி 37-வது வார்டு குமரிப்பேட்டை பஞ்சாயத்து தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா ?-அருள், குமரகிரிபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36793

பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையம் ஊராட்சி மோகனூர் சாலையில் திருமணிமுத்தாறு பாலம் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. தற்போது அந்த பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. எனவே இதனை அப்புறப்படுத்தி அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பழனி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick