23 July 2023 4:38 PM GMT
#36797
குடிநீர் தட்டுப்பாடு
சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மேற்கு நாராயணபிள்ளை தெருவில் மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது அந்த மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த குடிநீர்தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இதன் காரணமாக அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதனையும் சரிசெய்து தரவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மோட்டாரையும், குடிநீர் தொட்டியையும் சரிசெய்து தரவேண்டும்.
-ரமேஷ், நாராயணபிள்ளை தெரு, சேலம்.