Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37209

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரக்குப்பம் ஊராட்சி கொட்லேட்டியில் இருந்து ஏர்கேட் வழியாக இருளர் காலனி செல்லும் சாலை, சின்ன ஏரி குட்டை பகுதியில் உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலையின் இரு புறங்களிலும் தடுப்பு சுவர் அமைத்து, புதர்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.-ஜார்ஜ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37208

எச்சரிக்கை பலகை அமைக்கலாமே!

மற்றவை

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஆட்டோ, இருண்டு, நான்கு சக்கர வாகனங்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சென்று வருகிறது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-இஸ்மாயில், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37207

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்லானஅள்ளி ஊராட்சி அலுவலகம் அருகே உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு சுமார் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாத மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செந்தில், குட்லானஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37206

ஏரி தூர்வாரப்படுமா ?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிக்கலூர் கிராமத்தின் அருகில் மாமரத்து ஏரி, புது ஏரி ஆகிய ஏரிகள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. ஏரி தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா ?-சந்தோஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37205

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதி பகுதிகளில் சமீபத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் குழாய் அமைக்க போடப்பட்ட குழிகள் முறையாக மூடப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மழை நீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36976

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ெரயில் ரோட்டின் மேல் தரைவழி மேம்பாலம் உள்ளது. இதன் இரு புறங்களிலும் மணல் துகள்கள் அதிக அளவில் குவிந்து உள்ளதால் திடீரென காற்றடிக்கும் பொழுது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மணல் தூள் கண்களில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிபடுவதுடன் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலை ஓரங்களில் உள்ள மணல் துகள்கள் மற்றும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்த வேண்டும்.-பழனி, மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36974

அறிவிப்பு பலகை

மற்றவை

சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரி பகுதியில் தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் அங்கு நான்கு வழி பாதையாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்குச் செல்ல வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கொல்லி மலைக்குச் செல்லும் வழி என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.-ரமேஷ், காந்திபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36973

வேகத்தடைக்கு வர்ணம்

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து சித்தர் கோவில் அருகே ராசிபுரம் செல்லும் பிரதான சாலையின் வளைவில் வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடை அமைத்து இதுவரை வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எதிர்பாராத நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-குமார், அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#36972

சுகாதார கேடு

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த பாலமேடு ஊராட்சியில் அருந்ததியர் தெருவில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்தனர். அப்போது கழிவுநீர் வடிகாலில் இருந்து வெளியே எடுத்து போடப்பட்ட கழிவு மண் பல வாரங்கள் ஆகியும் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அன்புமணி, பாலமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#36971

சாலையின் நடுவே பள்ளம்

சாலையின் நடுவே பள்ளம்சாலை

சேலம் 29-வது வார்டு லண்டன் ஆர்த்தோ மருத்துவமனை இறக்கம் வழியாக சீதாராமன் செட்டி ரோடு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் சாலையின் நடுவே சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழியாக பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பாதாள சாக்கடையில் சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.-சதீஷ்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#36970

நிழற்கூடம் தேவை

சாலை

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் பழுதடைந்த காரணமாக இடித்துவிட்டனர். அந்த இடத்தில் மீண்டும் புதிய நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள், ஊராட்சி அலுவலர், தாசில்தார், மாவட்ட அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பள்ளி குழந்தைகளும், வயதானவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#36968

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாரமங்கலத்துப்பட்டி ஓம்சக்தி நகர் சி-பிளாக் பகுதியில் 2 மின்விளக்குகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக இந்த மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மாரியப்பன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick