Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Dec 2023 4:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42642

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் சமீபகாலமாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் ரெயிலை விட்டு இறங்கி வரும் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் புதர்கள் மண்டி கிடப்பதால் பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே இரவு நேரங்கள் முழுவதும் மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கிஷோர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#42468

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தனூர் சித்தர் கோவில் அருகே சாலையோரமாக கோழி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியாக செல்லும் தெருநாய்கள் அதனை இழுத்து சென்று சாலையின் பல இடங்களில் போட்டு விட்டு செல்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் கோழி கழிவுகள் அனைத்தும் முறையாக அப்புறப்படுத்தாத கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சிவராஜ், அத்தனூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#42466

வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் 4 குழாய்கள் அமைக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். அதில் 2 குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சேதமடைந்த குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? -ராஜேஸ்குமார், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#42465

சேதமடைந்த சாலை

மற்றவை

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா கிழக்கு ராஜபாளையம் முதல் மாவிலங்கை வரை செல்லும் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரமேஷ், வீரகனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#42464

மின்விளக்கு பொருத்தப்படுமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி வேட்டைக்காரன் புதூர் கரட்டு காட்டில் உள்ள மின் விளக்கு இல்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். -மணிகண்டன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#42459

எச்சரிக்கை பலகை

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள் மற்றும் ஒரு சில வாகனங்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு, எச்சரிக்கை சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுரேஷ், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42457

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் சரக்கு லாரிகளை வாரக்கணக்கில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் சரக்கு லாரி நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நாராயணசாமி, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#42455

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பேகப்பள்ளி ஊராட்சிக்குட்ட ராஜேஸ்வரி லே அவுட் சர்க்கிள் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழை காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தேவதாஸ், பேகப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#42453

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் நுழைவுவாயிலை ஆக்கிரமித்து கடைகள் இருப்பதால் பள்ளி மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?. -ஜெயசூர்யா, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#42266

சேதமடைந்த மேற்கூரை

மற்றவை

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கரியானூர் ரேஷன் கடையின் உள்பகுதி மேற்பகுதி இடிந்து பெயர்ந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த மேற்கூரையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அருள், சங்ககிரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#42262

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி தேவேந்திரர் தெரு பகுதியில் இருந்து ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வம், நடுப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#42261

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பிரதான சாலை ஓரத்தில் 2 உடைந்த மின் கம்பங்கள் போடப்பட்டு இருந். அந்த மின் கம்பங்களால் அந்த வழியே போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கம்பங்களை அப்புறப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -நாராயணன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick