Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Dec 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | பென்னாகரம்
#42845

சாலையோர தடுப்புகள் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடியில் சாலையோர தடுப்புகள் எதுவும் இல்லை. இதனால் அந்த வழியே இருசக்கர வாகனங்களில் வேகமாக வருவோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோரம் முட்புதர்கள் இருப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாலையோரம் விபத்துகளை தடுக்க தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சதா, செல்லமுடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42844

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி ஊத்துப்பள்ளத்தூரில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. தற்போது இந்த பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி சேதமடைந்து காணப்படுகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகன், செல்லமுடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#42843

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலைகளில் செல்லும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்துகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#42842

சுகாதார வளாகம் பராமரிக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடம் அருகில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததின் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலம் பயணிகள் பலரும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழித்து செல்கின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#42841

ஆபத்தான பள்ளம்

சாலை

ஓசூர் ஏரித்தெருவில் அம்மா உணவகம் எதிரே சாலையோரம் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் அதில் விழும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து பள்ளத்தை உடனடியாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#42664

மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து மேட்டூர் வரை இரு வழி தடங்களிலும் டவுன் பஸ் இயங்கி வந்தது. கொேரானாவுக்கு பின் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த வழிதடத்தில் உள்ள காளிப்பட்டி, பொட்டனேரி, நால்ரோடு, குஞ்சாண்டியூர், ராமநகர், 16 கண் பாலம், தெர்மல் ஆகிய ஊர்களில் இருந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழியாக மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -துரை, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#42662

விபத்து அபாயம்

சாலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகே செல்லும் மின்சார கம்பி அறுந்து கிடக்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அறுந்து கிடக்கும் மின்கம்பியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், சேலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#42660

சாலையில் தேங்கும் தண்ணீர்

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அடுத்து வள்ளியம்மன் கோவிலில் இருந்து மணியங்காளி பட்டி செல்லும் வழியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ரோட்டில் அதிக அளவில் வந்து தேங்குவதால் தார் சாலை சேதம் அடைந்துள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் விவசாய நிலத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா? -தினேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | இராசிபுரம்
#42658

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- திருச்செங்கோடு மெயின் ரோட்டில் உள்ள பாலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை இருந்தது. தற்பொழுது சாலை விரிவாக்கத்தின் போது வேகத்தடையை அகற்றிவிட்டதால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வேகமாக செல்கின்றனர். எனவே அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செந்தில், பாலப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | வேப்பனஹள்ளி
#42651

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகர் பகுதியில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளால் தொடர்ந்து விபத்தில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், புதிய பஸ் நிலையம், மருத்துவமனை செல்லும் சாலை மற்றும் குப்பம் ஜங்சன் சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஹரீஷ், வேப்பனபள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#42649

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் அண்ணா சிலை பின்புறம் சாக்கடை உள்ளது. இந்த பகுதியில் வக்கீல்கள் அலுவலகம், ஓட்டல்கள், பேக்கரிகள் நடைபாதை கடைகள் என பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த சாக்கடை கால்வாயில் நீண்ட நாட்களாக கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? - குமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42645

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்னைகுட்டஅள்ளி ஊராட்சி சிடுமன அள்ளி, பழையூரில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் இயங்கி கொண்டே இருப்பதால் குடிநீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜ், சிடுவம்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick