Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Aug 2022 3:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7931

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

ஓசூர்-தளி சாலையில் ரெயில்வே கேட்டில் இருந்து டி.வி.எஸ். நகர் வரை தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டும். -சென்னீரப்பா, விகாஸ் நகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7928

பராமரிக்கப்படாத விளையாட்டு மைதானம்

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு விளையாட்டு மைதானம் அமைத்தது. மேலும் மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்களையும் அமைத்து இருந்தனர். தற்போது அந்த விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் பயன்படாமல் இருக்கிறது. எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், அச்சமங்லம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7927

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்கண்டப்பள்ளியில் தோப்பம்மா கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே சாலையோரம் குப்பைகளும், கழிவுகளும் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். -மணி, மூக்கண்டப்பள்ளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7919

பள்ளி அருகே குவியும் குப்பைகள்

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சிகரலஅள்ளியில் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும். -நஞ்சுண்டன், சிகரஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7917

விபத்தை தடுக்க வேகத்தடை வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இதனை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் சாலையின் இரு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும். -முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7915

ஜல்லி கற்கள் பரப்பிய சாலை

ஜல்லி கற்கள் பரப்பிய சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காட்டம்பட்டி முதல் மாரியம்மன் கோவில் வரை சுமார் 2 கி.மீ. தூரம் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க முன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 5:33 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7772

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் நகரில் உள்ள தெருக்களிலும், சாலையோரங்களிலும் வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில தெருக்களில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -பாண்டியன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7771

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி அசோக்நகரில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும். -கதிர், கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7770

பள்ளத்தால் அடிக்கடி விபத்து

சாலை

சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள டாக்டர்ஸ் காலனி சந்திப்பில் சாலையின் இரு புறமும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும். - ரமேஷ், ஜாகிர் அம்மாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 5:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7769

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் நகரில் உள்ள தெருக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில தெருக்களில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்குவதால் மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 5:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7768

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கொட்டிரெட்டிபட்டி புதூரில் இருந்து பொட்டிரெட்டிப்பட்டி, பொன்னேரி இடையோன சாலை மிகவும் குறுகலாக உள்ளது. காலை மாலை நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் வாகன விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே பொட்டிரெட்டிபட்டி புதூரில் இருந்து எருமப்பட்டி வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். -புகழேந்தி, கொட்டிரெட்டிபட்டி புதூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7767

பயன்படாத பொதுகழிப்பிடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி தேவேந்திரகுல வேளாளர் தெருவில் பொது கழிப்பிடம் உள்ளது. செடி, கொடிகள் வளர்ந்து புதருக்குள் அமைந்துள்ள இந்த கழிவறை பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -சக்திவேல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick