Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18143

ஆபத்தான பள்ளி கட்டிடம்

மற்றவை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நடுப்பட்டி பஞ்சாயத்து எலத்தூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியின் மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பள்ளியின் மேற்கூரை இந்த வருட அதிக மழையால் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, காடையாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18142

வீணாகும் மின்சாரம்

மின்சாரம்

சேலம் ஓமலூர் மெயின் ரோடு இரும்பாலை பிரிவு ரோடு அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே இரவு நேரங்களில் மட்டும் மின் விளக்குகளை எரிய செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜ்குமாரி, ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#18141

சுகாதார கேடு

குப்பை

சேலம் இரும்பாலை ரோடு மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உட்பட்ட மருந்து கிடங்கு அருகில் சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் கைப்பற்றப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடமாக உள்ளது. மேலும் அங்கு குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18127

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மூன்றம்பட்டி ஊராட்சி வுட்டுகாரம்பட்டி பாம்பாறு அணை கால்வாய் அருகில் குப்பைகள் கொட்டப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா? -கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18125

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் சாலையின் இரு புறமும் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வந்தது. இதனால் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து தொடர் விபத்துக்களும் ஏற்படுகின்றன என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -சந்தோஷ், வேப்பனப்பள்ளி,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18124

ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்பேட்டை செல்லும் வழியில் பழமையான ஏரியில் நீண்ட நாட்களாக ஆகாய தாமரை செடிகள் படர்ந்து ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் இருந்து ஆகாயத்தாமரை செடிகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருணாச்சலம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18123

துணை சுகாதார நிலையம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமெட்டரை ஊராட்சி லிங்கனம்பட்டியில் துணை சுகாதார நிலையம் அரசு கட்டிடத்தில் உள்ளது. இங்கு செவிலியர்கள் மட்டும் உள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இல்லை இதனால் நோயாளிகள் மருத்துவம் பார்க்க ராயக்கோட்டை அல்லது உத்தனப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெயராமன். லிங்கணம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18122

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 13-வது வார்டு முகமதிர் தெருவில் சிலநாட்களாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமுவேல், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18120

தார்ச்சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரல் குந்தி பகுதியில் இருந்து சாமத்தாள், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. -தங்கபாலு, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18119

பழுதடைந்த மின்மோட்டார்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஅள்ளி ஊராட்சி மயான சாலையில் தாமோதரன் கொட்டாய் அருகில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மின்மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் மோட்டாரை சரி செய்வார்களா? -தருமன், மாதேஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18118

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஊராட்சி சனத்குமார் நதியில் பாலக்கோடு கடைதெருவில் இறைச்சி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்து தினமும் வெளியாகும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசவதுடன் நோய்பரவும் அபாயமும் உள்ளது. எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெகன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17933

வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைதண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் மழைநீர் வாய்க்கால் உள்ளது. இதில் வரும் தண்ணீரில் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கரும்பு, வாழை, நெல், போன்ற பயிர் வகை செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வாய்க்காலில் மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் ரோட்டில் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஆகாயத்தாமரை படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் ஆகாயத்தாமரையை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick