Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18330

ஆபத்தான மின்கம்பி

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காரகுப்பம் சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகில் சாலையில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இந்த சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் லாரிகள் மின்கம்பிகளை உரசும் வகையில் உள்ளதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை சரி செய்ய மின்சார துறை நடவடிக்கை எடுக்கப்படுமா? -ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18328

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சந்திரப்பட்டி ஊராட்சி சந்திரப்பட்டியில் இருந்து கல்லாவி செல்லும் சாலை அருகில் 2 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. இதில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக விவசாய கிணற்றுக்கு அலையும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரமோகன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18327

கூடுதல் பள்ளி கட்டிடம் தேவை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா தொட்ட மெட்டரை ஊராட்சி ராயக்கோட்டை அருகே லிங்கணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 283 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது பள்ளியில் 7 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாவதால் மாணவர்களுக்கு போதுமான இடவசதி கிடைக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன்கருதி கூடுதலாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராமன், லிங்கணம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#18325

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் குடியிருப்பு பகுதிகளிலும், பஜார் தெரு, கீழ்த்தெரு, வாணியர் தெரு உள்ளிட்ட இடங்களிலும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர்- சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை சாலையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துவார்களா? -ஜி.மஞ்சு, சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18324

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் முழுவதும் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றி திரிகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், மார்க்கெட் செல்லும் பெண்கள் தெருவில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18322

கழிவுநீர் கால்வாய் வேண்டும்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்தி முட்லு கிராமத்தில் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - வெங்கடேசன், அத்தி மூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18321

விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஅள்ளி ஊராட்சி காளியம்மன் தோப்பு பகுதியில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் உபகரணங்களை பயன்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -முனியப்பன், மாதேஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#18319

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றலாமே

குப்பை

தர்மபுரி மாவட்டம் அமனி மல்லாபுரம் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர், அமனி மல்லாபுரம், வட்டகானப்பட்டி, உப்பாரஅள்ளி, குஜ்ஜார அள்ளி, கடத்தி கொள்மேடு உள்ளிட்ட கிராமங்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகள் கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. அமனி மல்லாபுரம் அருகே பனந்தோப்பு பகுதியில் மலைபோல் குவித்து வைத்து எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18147

தாமதாகும் சாலை பணி

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து ஓ.சவுதாபுரம் பஞ்சாயத்து அறமத்தம்பாளையம் பகுதியில் இருந்து சீராய் கோவில் வரை செல்லும் சாலையை புதுப்பிப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சமித்ரா, அறமத்தாம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18146

சீரமைக்க வேண்டிய பஸ்கள்

போக்குவரத்து

நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம், எஸ்.வாழவந்தி, பாலப்பட்டி, நன்செய் இடையாறு வழியாக வேலூருக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் பழுதாகி காணப்படுகிறது. மழைக்காலத்தில் பஸ்கள் ஒழுகுகிறது. பயணிகள் நனைந்து கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பஸ்களை சீர்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்புராஜ், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#18145

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சின்ன தேர்நிலை அருகில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் அந்த கட்டிடம் பழுதானதால் அங்கன்வாடி மையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்காமல் வைத்துள்ளனர். இந்த தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொட்டியை இடிக்க வேண்டும். -சஞ்சீவி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#18144

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் மெய்யனூர் மெயின் ரோட்டில் கடந்த 3 மாதமாக சாலை பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் இந்த வழியே செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியடைகின்றனர். எனவே இந்த சாலை பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க வேண்டும். -கிரி, மெய்யனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick