Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17931

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் போலீஸ் குடியிருப்பு எதிரே நடுப்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையின் நுழைவு பகுதியில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17930

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். ரெயில்வே நுழைவு சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் சிதறி அடிக்கப்படுவதால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகேஷ், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17928

விசைத்தறி மின்இணைப்பு வேண்டும்

மற்றவை

சேலம் நெத்திமேடு தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் விசைத்தறி மின் இணைப்பு பெற அந்த பகுதியை சேர்ந்த பலர் மனு கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் அந்த பகுதி மக்களுக்கு விசைத்தறி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சோமு, பெருமாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17927

பள்ளிக்கூடத்தில் காம்பவுண்டு சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் மூங்கில்பாடி ஊராட்சி சேனை கவுண்டனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு காம்பவுண்டு சுவர் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - -செந்தில்குமார், சேனை கவுண்டனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17926

அகற்ற வேண்டிய மின்கம்பம்

அகற்ற வேண்டிய மின்கம்பம்மின்சாரம்

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே ஒப்பாறைப்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அந்த மரத்தின் அருகே மின்கம்பிகள் செல்வதால், மரத்தின் விழுதுகள் மின்கம்பியை உரசியவாறு செல்கிறது. இதனால் மழை பெய்தாலோ அல்லது காற்று அடித்தாலோ அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய விபத்துகள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை அகற்ற வேண்டும். -எம்.முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17922

பூங்காவை பராமரிக்கலாமே!

பூங்காவை பராமரிக்கலாமே!மற்றவை

ஓசூர் தர்கா பகுதியில் டைட்டான் கம்பெனி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது. தற்போது அந்த பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் இங்கு பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் இருப்பதால் குழந்தைகள் வர பயப்படுகிறார்கள். பூங்காவுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -சண்முகவள்ளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17921

கழிவுநீர் கால்வாய் பணி

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தர்மபுரி, கிருஷ்ணகிரி ரோடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளின் இருபுறமும் ஒரே நேரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்க முடியாமலும், வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -அய்யனார், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17920

சரிசெய்யப்பட வேண்டிய குடிநீர் குழாய்

தண்ணீர்

ஓசூர் மாநகராட்சியில் அரசனட்டி பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்க கடந்த 30 நாட்களுக்கு முன்பு சாலை தோண்டப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இதுநாள் வரை சரிசெய்யப்படவில்லை. மேலும் சாலையிலும் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்து சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வி.இராஜேந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17919

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

ஓசூர் அருகே உள்ள நாகொண்டப்பள்ளி ஏரியின் கரையோரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. ஓசூர்- தேன்கனிக்கோட்டையின் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் அதிகம் செல்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மஞ்சுளா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17917

பழுதடைந்த மின் மோட்டார்

பழுதடைந்த மின் மோட்டார்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மோதுகுலஅள்ளி ஊராட்சி முருக்கம்பட்டி கிராமம் அருந்ததியர் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணற்றின் குழாய்கள் பழுதடைந்தும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் இன்றி வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவகுமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17915

நிழற்கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்

நிழற்கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்சாலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஏ.பள்ளிப்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கிராமத்தின் வழியாக சேலம்- சென்னை நெடுஞ்சாலை செல்கிறது. பல்வேறு கிராமங்களின் மையப்பகுதியாக இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து சேலம், சென்னை, திருவண்ணாமலை அரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் நின்று செல்கிறது. அவ்வாறு வெளியூர் செல்ல இந்த பஸ்நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் நிழற் கூடம் இல்லாத காரணத்தினால் வெயில் மற்றும் மழைக்காலங்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17914

வெட்ட வேண்டிய மரக்கிளைகள்

வெட்ட வேண்டிய மரக்கிளைகள்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தநிலையில் மரக்கிளைகளில் உரசியபடி மின் கம்பிகள் செல்கின்றன. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மரக்கிளைகளை வெட்டி அகற்ற மின்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -ரவி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick