Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17913

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி, சீலநாயக்கனூர், முதுகம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய தார் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுவதால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும். -இந்திரகுமார், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17727

குரங்குகள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து அத்தனூர் பேரூராட்சி சித்தர் கோவில் மலைப்பகுதியில் இருந்து குரங்குகள் வீடுகள் பக்கம் அதிகம் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வீடுகள் அருகே குரங்கள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிரி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17726

சுகாதார கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளி ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் எதிரில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் குப்பைகளை சாலையை தாண்டி பள்ளி கட்டிடங்களின் ஓரமாக கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேட்டால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமகோபாலன், அண்ணா நகர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17725

பயணிகள் நிழற்கூடத்தின் நிலை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து காந்திபுரம், ராமநாதபுரம் புதூர் வழியாக கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் சாலையில் வெண்டாங்கி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தில் வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூடத்தை வேறு உபயோகத்திற்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமசாமி, வெண்டாங்கி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#17724

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் கச்சராயனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி தண்ணீர் இல்லாமல் காணப்படுவதால் மாணவ-மாணவிகள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர். -சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17723

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் வின்சென்ட் பிள்ளையார் நகர் 2-வது வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் சாலைகளில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17722

சேதமடைந்த தொடக்கப்பள்ளி சமையலறை

மற்றவை

சேலம் தாரமங்கலம் ஊராட்சி மானத்தாள் கிராமம் எம். ஓலைப்பட்டி நாடார் காலனியில் உள்ள தொடக்கப்பள்ளி சமையலறை சேதமடைந்து உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி சேதமடைந்த தொடக்கப்பள்ளி சமையலறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -பிராபாகரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17721

பாதுகாப்பு இல்லாத கிணறு

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கிணறு குப்பைகள் நிறைந்து சுகாதாரம் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்த கிணற்றை சுத்தப்படுத்தி சேதமடைந்த சுவரை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17698

சேதமடைந்த கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த அமானிமல்லாபுரம் அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு ஆசிரியர், சத்துணவு ஊழியர் இல்லாததால் தற்காலிக பணியாளர்களை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். -கவின், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17697

பழுதான மின் மோட்டார்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அண்ணா நகரில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் அதிக மின் அழுத்தம் காரணமாக எரிந்து வீணானது. இதனால் தண்ணீர் வழங்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்மோட்டார் அமைத்து மாணவ- மாணவிகளுக்கு உதவ வேண்டும். -தங்கராஜ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17696

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

தர்மபுரி மாவட்டம் கோணங்கிஅள்ளி ஊராட்சி பி.அக்ரஹாரம் கிராமத்தில் முனியப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் இருந்து சேரும் குப்பைகள் ஊராட்சி அலுவலகம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள். -ஜீவன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17695

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தாலுகா டி.அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர் நகர் மேல் கூட்ரோடு அருகில் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கும் மேல் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 1 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -சிவா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick