Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2022 3:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17693

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டேகுப்பம் ஊராட்சி வேங்கான் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கேசவன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17689

கூடுதல் டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அம்மேரி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாய பம்ப்செட்டுகள் உள்ளன. இவற்றிற்கு அடிக்கடி குறைந்த அளவு மின்சாரம் வருவதால் வீடுகளில் மின் பழுது ஏற்படுகிறது. இதனால் விவசாய நிலத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. எனவே இந்த பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? -பழனிவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17688

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி கோ-ஆப் காலனி 3-வது கிராசில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் அதிகம் உள்ளன. இதனால் எந்தநேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். -வினோத், கிருஷ்ணகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17490

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் இருந்து கல்யாணி செல்லும் சாலையில் நொச்சிப்பட்டி என்ற பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக தினந்தோறும் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையால் இரவு நேரத்தில் விபத்து அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி நொச்சிப்பட்டி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைசாமி, புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17488

பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த அணியாபுரத்தில் என்.எஸ்.ஆறுமுக உடையார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு காம்பவுண்டு சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை விளையாட்டு மைதானத்தில் போட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் முகம் சுளிக்கும் அவல நிலை உள்ளது. எனவே விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17487

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மரூர்பட்டியில் இருந்து முதலைப்பட்டி புதூருக்கு செல்லும் வழியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியில் வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி செல்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -கார்த்தி, மரூர்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17486

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா 4-வது வார்டு கோரக்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடாஜலம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17484

ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர்

மற்றவை

சேலம் ஜங்ஷன் ரெயில்நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை அருகில் ஏரி இருப்பதால் இந்த பாதையில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்ட மின் மோட்டார் அடிக்கடி பழுது அடைந்து விடுகிறது. இதனால் இந்த பாதை வழியே மக்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள மிக குறுகிய சுரங்கப்பாதை வழியாக மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே உடனடியாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் சேற்றினை அகற்றி சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17482

சேதமடைந்த கட்டிடம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பச்சனம்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு பணியாற்றும் செவிலியர்கள் எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். இங்கு வரும் நோயாளிகளும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். -சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17480

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

சேலம் கோரிமேடு 8-வது வார்டு ஏ.டி.சி. நகர் செல்லும் வழியில் செங்கோட கவுண்டர் சாலையில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். .ஜ.முஜிபுர் ரகுமான், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17464

அகற்ற வேண்டிய பிளாஸ்டிக் கழிவுகள்

அகற்ற வேண்டிய பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வெள்ளிச்சந்தை சாலையில் சி.எம்.புதூர் அருகே சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -காந்தி, சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17463

ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாளநத்தம் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். -ஏழுமலை, தாளநத்தம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick