Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Sep 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17462

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொட்டுமாரனஅள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் இரவில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்விளக்குகளை எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17461

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில், பஸ் நிலையம், கடைவீதி, இந்தியன் வங்கி, நியாய விலை கடை ஆகியவை அமைந்துள்ள முக்கியமான இடத்தில் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதில் ஓட்டல் கழிவுகளும் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை ஆங்காங்கே இழுத்து சென்று வீசுவதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சபரி ராஜ், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17460

சாலையோர ஆக்கிரமிப்புகள்

சாலையோர ஆக்கிரமிப்புகள்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கொங்கணப்பள்ளி சாலையிலும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பும் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளால் அப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாஸ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17459

தாசப்பன் ஏரியை தூர்வார கோரிக்கை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா தொட்டமெட்டரை ஊராட்சி லிங்கணம்பட்டி அருகே தாசப்பன் ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராமன், லிங்கணம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17458

சீரமைக்க வேண்டிய சிறுவர் பூங்கா

சீரமைக்க வேண்டிய சிறுவர் பூங்காபூங்கா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி இந்திரா நகரில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு கருவிகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பூங்காவிற்கு உள்ளே முட்புதர்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த சிறுவர் பூங்காவை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும். -கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17456

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பத்தில் இருந்து காமராஜ் நகர், செங்கொடி நகர் வரை செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17277

பன்றிகளால் சுகாதார கேடு

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி 15 மற்றும் 4-வது வார்டு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித் திரிகின்றன. அந்த பன்றிகள் குப்பை கழிவுகளை கிளறிவிடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்புகளில் பன்றிகள் வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17276

இரவில் எரிய வேண்டிய கோபுர விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த விளக்கு இரவு நேரத்தில் எரிவது மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டு இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மட்டும் உயர் கோபுர மின்விளக்கு எரிய செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?-சங்கர், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17275

வேகத்தடை அவசியம்

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள வார சந்தை அருகே வாங்கல் ரோடு பிரிந்து செல்கிறது. இந்த பகுதியில் 3 ரோடும் இணையும் பகுதியில் மையப்பகுதியில் ரவுண்டானா போல் இரும்பு கம்பியை வைத்து உள்ளனர். ஆனால் எந்தப் பகுதியிலும் வேகத்தடை இல்லாததால் 3 சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பலமுறை விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே விபத்துகள் தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரபாபு, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17274

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 4-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து இங்குள்ள காலி மனை மற்றும் பூங்கா பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. தண்ணீர் தேங்குவதால் அந்த பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அடுத்த மழைக்காலம் வருவதற்குள் சாக்கடை கால்வாய் அமைத்து மழைநீர் தேங்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17272

தெருவிளக்கு எரியவில்லை

மின்சாரம்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியில் அரசுப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -தினேஷ்குமார், கொப்பம்புதூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17271

பாதியில் நிற்கும் மின்கம்பம் பணி

பாதியில் நிற்கும் மின்கம்பம் பணிமின்சாரம்

சேலம் அமாணி கொண்டலாம்பட்டி அரசு மரத்து கரட்டூர் ஆட்டோ நகர் உள்ளது. இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை யோரம் ஒரு ஆண்டு காலமாக மின் கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் அந்த மின்கம்பத்தை அகற்ற அதன் அருகில் 6 மாதத்திற்கு முன்பு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த புதிய மின் கம்பத்திற்கு இணைப்பை மாற்றி அமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவைத்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்திற்கு மின்இணைப்பு கொடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick