Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Sep 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17268

காம்பவுண்டு சுவர் இல்லாத பள்ளி

மற்றவை

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த கச்சராயனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி அருகே கச்சராயனூர்-மல்லியகுந்தம் தார்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே பள்ளியை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரா.சுந்தரராஜன், கச்சராயனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17252

தூர்வார வேண்டிய கால்வாய்

கழிவுநீர்

ஓசூர் 37-வது வார்டு பாரத் நகரில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாயை சுற்றி குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் கால்வாயை தூர்வாரி மழைநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி.சுரேஷ், மத்திகிரி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17251

சேதமடைந்த அங்கன்வாடி மையம்

சேதமடைந்த அங்கன்வாடி மையம்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். சேதமடைந்து காணப்படும் அந்த கட்டிடத்தின் சிமெண்டு பூச்சிகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் தற்போது தனியார் வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். -எம்.கார்திக்கேயன், எச்சம்பட்டி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17250

எலும்புக்கூடான மின்கம்பம்

எலும்புக்கூடான மின்கம்பம்மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒப்பதவாடி ஊராட்சி வேடியப்பன் நகர் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று துறுப்பிடித்து விழும் நிலையில் காணப்படுகிறது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடியும் எலும்புகூடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக மின்கம்பத்தை கடந்தும் செல்லும் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தினை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். -பூங்கொடி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17249

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகர்ப்பகுதியில் 2 மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. 25-க்கும்மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக பென்னாகரம் கடைவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த தெரு நாய்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலா, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17248

கழிவுகளால் கழிவுநீர் தேக்கம்

கழிவுகளால் கழிவுநீர் தேக்கம்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் இந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பை கழிவுகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17247

ஜல்லிகற்களாக மாறிய தார்சாலை

ஜல்லிகற்களாக மாறிய தார்சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய 2 ஊராட்சிகள் சந்திக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது வெத்தலக்காரன்பள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் தார்சாலை சேதமடைந்து, பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17246

சாக்கடை கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாங்கரை கிராமத்தில் உள்ள செட்டியார் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த தெருவில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சம்பத், மாங்கரை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17094

மீண்டும் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா?

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 26-வது வார்டு கோனேரிப்பட்டி காந்தி நகரில் அடி பம்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த அடிபம்புடன் கூடிய ஆழ்துளை கிணற்றை அகற்றிவிட்டனர். இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் அடிபம்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.--பிரபு, கோனேரிப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17093

பேனர்களால் விபத்து அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள், திருமண வாழ்த்து, கோவில் திருவிழா, கும்பாபிஷேகம், கண்ணீர் அஞ்சலி போன்றவைகளுக்கு பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் கடந்தும், அதனை அகற்றுவதில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா? -ராஜபாண்டியன், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#17092

தூர்வார வேண்டிய கருவாட்டு ஆறு

தூர்வார வேண்டிய கருவாட்டு ஆறுதண்ணீர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பைல் நாட்டிலிருந்து வெள்ள நீர் அடிவாரம் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தநிலையில் அந்த வழியாக ஓடும் கருவாட்டு ஆற்றில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் அதனை அப்புறப்படுத்தி ஆற்றின் பகுதியை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கமலசேகர், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#17090

பாதியில் நிற்கும் சாலை பணி

சாலை

சேலம் 24-வது வார்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பணிகள் பாதியிலே நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் மழை பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -விஜயா, கந்தம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick