Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Sep 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17089

சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறிய நூலகம்

சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறிய நூலகம்மின்சாரம்

சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளார் ஊராட்சியில் நூலகம் அமைந்துள்ளது. நூலகம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள நிலையில் இந்த நூலகமானது பராமரிப்பு இன்றி சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. எனவே நூலகத்தை பராமரிப்பதுடன், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -ச.ஆனந்தகுமார், வெள்ளார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17088

குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் பி.நல்லாகவுண்டம்பட்டி செட்டியார் கடை பஸ் நிறுத்தத்தில் உள்ளது புதுகாலனி. இந்த பகுதி பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த மின்மோட்டார் பழுதானது. இதனால் அந்த பகுதியினர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து மின்மோட்டரை சரிசெய்து தரவேண்டும். -காவேரி, புதுகாலனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#17087

மின் விளக்கு இல்லாத கழிப்பிடம்

மின்சாரம்

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுகழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடத்திற்கு மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிைல உள்ளது. குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பிடத்திற்கு மின் விளக்குகள் அமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுசி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17086

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகே உள்ள அலசநத்தம் ஏரி கரையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பரவி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17085

பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்

பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கோணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மேலும் பள்ளி நேரங்களில் கால்நடைகள் உள்ளே நடமாடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைராஜ், கோணப்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#17082

பயனற்ற நிழற்குடை

பயனற்ற நிழற்குடைபோக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் பயணிகள் பயன்பாட்டுக்காக நிழற்குடை கட்டப்பட்டது. இந்தநிலையில் நிழற்குடையை சுற்றி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் வெயில், மழைக்காலங்களில் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முட்புதர்களை அகற்றி நிழற்குடையை சீரமைத்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன்வருவார்களா? -சதீஷ்குமார், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17081

செயல்படாத சோதனைச்சாவடி

செயல்படாத சோதனைச்சாவடிமற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, போலீசாரின் சோதனைச்சாவடி மையமாக மாற்றி அமைத்தனர். இந்தநிலையில் தற்போது இந்த சோதனைச்சாவடி செயல்படாமல் உள்ளது. போலீசாரும் பயன்படுத்தாமல், பயணிகளுக்கும் பயன்படாமல் அப்படியே இருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் மர்ம நபர்களின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - சுதாகர், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17080

பயன்படாத குடிநீர் தொட்டி

பயன்படாத குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் நமாண்டஅள்ளி கிராமத்தில் மழலையர் பள்ளி முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் குழாய்கள் சேதமடைந்தும், மின் மோட்டார் பழுதடைந்தும் பயன்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைத்து, மின் மோட்டாரின் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்வார்களா? -பிரவீண், நாமண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17079

புதருக்குள் கால்நடை மருந்தகம்

புதருக்குள் கால்நடை மருந்தகம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் கால்நடை மருந்தக கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. மேலும் மருந்தகம் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே முட்புதர்களை அகற்றி கால்நடை மருந்தகம் உள்ள வளாகத்தை தூய்மைப்படுத்தி சுகாதாரமாக வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெயா, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#17078

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் நல்லசேனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சாமிகவுண்டனூர் கிராமத்தில் ஒரு சில இடங்களில் உள்ள மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து ஆபத்தாக கீழே விழும் நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். -அஜித், சாமிகவுண்டனூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16864

காம்பவுண்டு சுவர் வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் கால்நடை கிளை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் ஒரு பகுதியில் காம்பவுண்டு சுவர் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு காம்பவுண்டு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், கே.புதுப்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16863

தெப்பக்குளம் தூர்வாரப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் இருந்து சற்று தொலைவில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெப்பகுளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமசாமி, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick