Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Sep 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#16862

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி 4-வது வார்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் அவ்வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16861

பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

சேலம் வழித்தடம் எண்-1 புதிய பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸ் வழியாகவும், 13B பழைய பஸ் நிலையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியாகவும் அயோத்தியாப்பட்டணம் செல்கிறது. இந்த 2 வழித்தடங்களிலும் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் செல்லாமல் சில நேரங்களில் மெயின் ரோட்டில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி சர்வீஸ் ரோட்டில் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஸ்தூரி கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#16860

ஆபத்தான கிணறு

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஓலைப்பட்டியில் 5-வது வார்டு மாரி அம்மன் கோவில் அருகில் பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றின் சுற்றுசுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணற்றின் அருகே செல்பவர்கள் தவறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றுக்கு சுற்றுசுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#16859

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும், கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரவேல், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#16858

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 தியேட்டர் வரை உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான், குப்தாநகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16849

சுகாதார கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா குருபசப்படி கிராமத்தில் அரசு அங்கன்வாடி பள்ளி உள்ளது. இங்கு 5 வயது வரையிலான குழந்தைகள் வந்து படித்து, உணவருந்தி செல்கின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள நிலத்தில் கற்கள் கொட்டப்பட்டு வருவதால் அதன் துகள்கள் காற்றில் பறந்து குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இங்கு கற்கள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகர், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16848

நூலகம் திறக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் ஊராட்சி காமராஜ் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு உள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோரின் நலன் கருதி இந்த நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16847

பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி ஊராட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த வழியே செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பராமரிப்பு இல்லாத இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.. -ஆறுமுகம், கல்லாவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#16846

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் கல்லூர் கிராமத்தில் இருந்து கல்லாவி செல்லும் சாலையின் அருகில் குப்பைகள் பல நாட்களாக சிதறி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16844

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 17-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தரவேண்டும். -தம்பிதுரை, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16843

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

சாலை

தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி பனந்தோப்பில் இருந்து ஏரிகோடி வரை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு தார்சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வழியாக பள்ளி கல்லூரிக்கு வாகனங்களில் செல்லும் மாணவர்கள், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே தார்சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#16842

முட்செடிகளை அகற்ற கோரிக்கை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி சின்னரெட்டிஅள்ளி கிராமத்தில் மயான பகுதி முழுவதும் முட்செடிகள் அதிகளவு முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் ஊராட்சி குப்பை கழிவுகளையும் மயானத்திலேயே ஊராட்சி நிர்வாகம் எரிக்கிறது. இதனால் அப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்லும் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மயான வளாக பகுதியில் உள்ள முட்செடிகளை அகற்றி குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். -சதீஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick