Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Nov 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#21112

பள்ளம் மூடப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டாபுரம் பஞ்சாயத்து 5-வது வார்டில் குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை மூடாமல் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் குழிகளில் தேங்கி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். -சுப்ரமணியம், வளையபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21110

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலைசாலை

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி காமராஜர் சிலை அருகில் பைபாஸ் கிராஸ் ரோட்டில் சாக்கடை கால்வாய் நீர் தேங்கி சாலையில் செல்கிறது. அந்த இடத்தில் சாலையும் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#21108

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் மேச்சேரி தாலுகா மல்லியகுந்தம் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சூரியனூர், கச்சராயனூர், ஆரியக்கவுண்டனூர், திப்பரத்தாம்பட்டி, நரியனூர், உப்புபள்ளம், குப்பகாளிப்பட்டி, வேங்கானூர் ஆகிய இடங்களில் இருந்து கால்நடைகளை மல்லிகுந்தம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு செல்லும் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21106

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடியில் இருந்து பரவகரடு அத்துவான மாரியம்மன் கோவில் வரை சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் பாம்பு, விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்களும், பொதுமக்களும் அந்த வழியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நிகிலன், கருப்பூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#21105

குடிநீர் வழங்கப்படுமா?

குடிநீர் வழங்கப்படுமா?தண்ணீர்

சேலம் மாவட்டம் 29-வது வார்டு அண்ணா பூங்கா எதிரே ரத்தினசாமிபுரம் 2-வது கிராஸ் தெருவில் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி உள்ளது. அந்த பகுதியில் சாக்கடை தோண்டப்பட்ட போது மோட்டாருக்கு செல்லக்கூடிய மின்சார வயர் அறுந்து 5 மாதத்திற்கு மேலாகிறது. அங்குள்ள மோட்டாரை பழுது பார்ப்பதற்காக எடுத்து சென்றவர்கள் இதுவரை மீண்டும் பொருத்தவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21097

சேதமடைந்த தடுப்பு கம்பி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஒகேனக்கல் சினி பால்ஸ் அமைந்துள்ளது. இந்த சினி பால்சின் தடுப்பு கம்பி வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த தடுப்பு கம்பியை சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரியப்பன், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21095

கழிப்பிடம் திறக்கப்படுமா?

கழிப்பிடம் திறக்கப்படுமா?கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள நவீன கழிப்பிடம் மற்றும் குளியலறை சில நாட்களாக பூட்டியே கிடக்கின்றன. இதனால் பயணிகள், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நாராயணசாமி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21090

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டியில் இருந்து தேங்காமரத்துபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மின் கம்பங்கள் உள்ளன. இதில் ஒரு மின் கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரமேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21087

கவிழ்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டி

குப்பை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூரில் சாலையோரம் உள்ள குப்பை தொட்டிகள் அனைத்தும் தலைகீழாக கிடக்கின்றன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தாமல் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் குப்பை தொட்டியின் அருகிலேயே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -காவியநந்தன், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21083

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து ஓசூர் சாலை, கிருஷ்ணகிரி ரோடு, சூளகிரி ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய 4 சாலைகளின் இருபுறமும் கடைகளின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21082

பள்ளியை சூழ்ந்த மழைநீர்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இ்ங்கு 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மழைக்காலங்களில் பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கியும், பள்ளி செல்லும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21081

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையில் செல்லும் மாணவர்களும், இப்பகுதியில் குடியிருப்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிஷோர், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick