Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Nov 2022 3:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21329

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் சிவதாபுரம் 22-வது வார்டில் சாக்கடை கால்வாயின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -பெருமாள், சிவதாபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21328

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில், பேரிகை செல்லும் சாலையில் சர்க்கிள் அருகே சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாள்தோறும் இந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு மோசமாக சாலை உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலகிருஷ்ணன், பெலத்தூர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21327

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த என்.எஸ்.ரெட்டியூர் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை மகளிர் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி செய்து தரக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பூட்டியே வைத்துள்ளனர். எனவே சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தருவதுடன், மகளிர் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். -பார்வதி, நல்லசேனஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21326

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிசாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சேதமடைந்த மூடியால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளில் நலன் கருதி பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - வெற்றி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21325

ஆக்கிரமிக்கப்பட்ட பஸ் நிலையம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றி புதிதாக சாக்கடை கால்வாய் அமைத்து தார் சாலை போடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள கடையின் உரிமையாளர்கள் சிலர் தார்சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து கடைளை நீடிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையின் நடுவில் நடந்து செல்லும் நிலையும் ரோட்டில் வாகனம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21324

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு 10-வது வார்டு பள்ளிக்கூடத்தான் காலனியில் மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. வேகமாக காற்று அடித்தால் கூட சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குரு, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21323

கண்காணிப்பு கேமரா அவசியம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முக்கிய சாலைகளில் திருட்டு சம்பவங்களை குறைக்க பர்கூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் சார்பில் 15-க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் ஒரு வருடங்களுக்கு மேலாகியும் அந்த கம்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை. எனவே தாமதம் இன்றி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பரமசிவம், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21322

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி ஊராட்சி அனுமன் தீர்த்தம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு கடந்த ஒரு வருடமாக எரியாமல் உள்ளது. இதனால் வேலூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பஸ்சுக்காக நிற்கும் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் அந்த உயர்மின் கோபுர விளக்கை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21319

சேறும், சகதியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெங்கபிராம்பட்டி கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து கொடுக்க வேண்டும். -வெங்கடேஷ், கெங்கபிராம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21115

சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவில் நிலங்கள் அதிக அளவு உள்ளது. இவை ஊரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. அந்த நிலங்களில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அதிலிருந்து வரும் விஷ பூச்சிகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பிரேம்குமார், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21114

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் இருந்து விளாரம் கிராமம் செல்லும் வழியில் ஒரு வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மேலிருந்து இடங்களை சுற்றி பார்த்துவிட்டு குப்பைகளை அந்த இடத்தை சுற்றி போட்டு வருகின்றனர். இதனால் அடுத்த அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21113

கழிப்பிடம் திறக்கப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு என்று சிறுநீர் கழிப்பிடம் திறக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகம் இந்த கழிப்பிடத்தை பூட்டியதால் பெண்கள் அருகில் உள்ள பாதாள சாக்கடை அருகே சிறுநீர் கழிக்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்குள் விழும் அபாயம் உள்ளது, எனவே நகராட்சி நிர்வாகம் பூட்டியுள்ள கழிப்பிட கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -சந்தோஷ், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick