Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Nov 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22043

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எர்ரண்டப்பள்ளி கிராமத்தில் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. கிராமத்தின் மைய பகுதியில் உள்ள இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளதால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூபதி, எர்ரண்டப்பள்ளி, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22041

விபத்து அபாயம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை- ஓசூர் மெயின் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழையும் இடத்தில் சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்து ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22035

புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் விளையாடக்கூடிய மைதானத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். -குப்பன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21861

விபத்தை தடுக்க தடுப்புகள் அவசியம்

சாலை

ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்கதாக உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் என நூற்றுக்கணக்கான பஸ்களும், லாரி போன்ற கனரக வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தை தடுக்கும் வகையில் நாமக்கல் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்க வேண்டும். ஏற்கனவே அந்த பகுதியில் தடுப்புகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21860

போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் மோகனூர் கடை வீதியில் தனியார் மளிகை கடைக்கு சாமான்கள் இறக்குவதற்கு பகல் நேரங்களில் வாகனங்களில் வந்து பொருட்கள் இறக்குவதால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்களை இறக்கும் போது எதிர் திசையில் வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமலும், தடுமாறும் நிலை உள்ளது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலையில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நல்லதம்பி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21859

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் பேரூராட்சி ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சரிசெய்து எரிய செய்ய வேண்டும். மணி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21858

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டோல்கேட் அருகில் கோட்டக் கவுண்டன்பட்டியில் இருந்து பாகல்பட்டி செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. மழைக்காலம் வந்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இவ்வழியே பயணம் செய்கின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். -ஜோசப், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#21857

சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி

மற்றவை

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் வகுப்பறையில் ஒழுகும் நிலை உள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அபாயகரமான பள்ளியின் மேற்கூரையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜாங்கம், மல்லிகுந்தம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21856

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

செடி, கொடிகள் அகற்றப்படுமா?குப்பை

சேலத்தை அடுத்த ஆண்டிப்பட்டிக்கும், போடிநாயக்கன்பட்டிக்கும் இடையே ரேஷன் கடை உள்ளது. அந்த கடைக்கு செல்லும் வழியிலும், அதனை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. ரேஷன் கடைக்கு வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.-தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21854

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஜங்காளப்பட்டி கிராமத்தில் இருந்து அரூர் போகும் வழியில் கவரிமலை சாலை உள்ளது. அந்த சாலை தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. 6 மாத காலமாக இதே நிலையில் இருப்பதால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும். -சூர்யா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21852

விதிகளை மீறும் தனியார் பஸ்கள்

போக்குவரத்து

தர்மபுரியில் இருந்து மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இந்த பஸ்கள் பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் கூட நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் நேரத்தை சரி செய்ய டிரைவர்கள் அதிவேகமாக பஸ்சை ஓட்டுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்தி, மொரப்பூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21841

கல்லூரிக்கு அடிப்படை வசதி தேவை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கல்லூரி வளாகத்தில் போதுமான குடிநீர் வசதி, வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி பலமுறை முறயைிட்டும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதி செய்து தர முன்வரவேண்டும். -ராமலிங்கம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick