Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Nov 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22072

பழுதான தெருவிளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரிக்கல்் கரடு பகுதியில் தெருவிளக்குகள் பழுதானதால் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான மின் விளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? -மணி, நரிக்கல் கரடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22070

ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கொல்லிமலை அடிவார பகுதிகளில் கனமழை பெய்து ஓடைகளிலும் தண்ணீர்வர தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கொல்லிமலை சிங்களம் கோம்பையில் இருந்து வரும் ஓடை தண்ணீர் எருமப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் ஓரமாக சிறு ஓடையாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சரிவர தண்ணீர் செல்லாமல் விவசாய நிலங்களில் புகுந்துள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை சீரமைக்க ேவண்டும். -ராஜா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22068

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் கே. புதுப்பாளையம் உள்ளது, அங்குள்ள தம்பிகலை அய்யனார் கோவில் அருகில், அணியாபுரத்தில் இருந்து தோளுர் வழியாக வரும் சாலையும் ஒன்றாக இணைகிறது. அந்த பகுதியில் ஏராளமான கோழி பண்ணைகள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் கனரக வாகனங்கள் திரும்பும் அளவிற்கு சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராசப்பன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22067

ஜல்லி கற்களால் ஆன சாலை

சாலை

சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் வாறுகால் கட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதங்கள் ஆகியும் இந்த சாலை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இந்த வழியாக செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இருசக்கர வாகனங்களால் செல்ல முடியவில்லை. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22066

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

மற்றவை

சேலம் தலைமை தபால் அலுவலகத்திற்கு வரக்கூடியவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை வெளியில் நிறுத்த இயலாத அளவிற்கு காய்கறி கடைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதனால் தபால் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். -பூபதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#22065

சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோட்டப்பட்டி சாலையில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மூச்சு திணறலால் அவதியடைகின்றனர். அப்பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜா, வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22063

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மரவனேரி பகுதியில் பிள்ளையார் நகர் முதல் ஐஸ்வர்யா கார்டன் வரை உள்ள சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் அவர்கள் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், மரவனேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22051

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மிட்டாதின்ன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமத்தம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சிலர் பள்ளிக்குள் புகுந்த மது அருந்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் நடக்கும் சமூக விரோத செயலை தடுக்க பள்ளி வளாகத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும். -ரமேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22049

பிரதான சாலையில் மின்விளக்கு வசதி

மின்சாரம்

தர்மபுரி நகரில் அப்பாவுநகர் பிரதான சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம், தனியார் அலுவலகங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பிரதான சாலை வழியாக இரவு நேரங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை இருள் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே போதுமான மின்விளக்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -மாது, அப்பாவு நகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22048

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் சிமெண்டு சாலை அமைத்து போடப்பட்டு சுமார் 15 வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது இந்த சிமெண்டு சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து பஸ் நிலையம் முழுவதும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோரும், பயணிகள் நடந்து செல்வதுக்கும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22046

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு தாண்டவ உடையார் தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22045

சாலையில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வேப்பனப்பள்ளியில் இருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். -சின்னசாமி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick