Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Nov 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#22319

சுரங்கப்பாதையில் விபத்து

தண்ணீர்

சேலம் மேற்கு வட்டம் சித்தர் கோவில் இளம்பிள்ளை பிரதான சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்தநிலையில் அந்த சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளன. இந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சிலர் அந்த குழியால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த குழிகளை சரி செய்யவும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேசிங்குராஜா, இளம்பிள்ளை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22318

பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்தண்ணீர்

சேலத்தை அடுத்த வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 5 ரூபாய் நாணையத்தை போட்டு ஒரு குடம் தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிடித்து கொள்ளலாம் என்ற முறையில் அமைக்கப்பட்டது. ஆனால் பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#22316

'தினத்தந்தி'க்கு நன்றி

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி காமராஜர் சிலை அருகில் பைபாஸ் கிராஸ் ரோட்டில் சாக்கடை நீர் தேங்கி சாலையில் சென்றது. இதனால் அந்த இடத்தில் சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி விபத்தில் சிக்குகின்றனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சாலையில் சாக்கடை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22312

தள்ளுவண்டிகளால் விபத்து

போக்குவரத்து

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே சாலை இருபுறங்களும் தள்ளு வண்டிகளை நிறுத்தி விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இவ்வாறு சாலையில் நிறுத்துவதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயண ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22311

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

குப்பை

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிளை சிறைச்சாலை, தீயணைப்பு நிலையம் ஆகிய அலுவலகங்கள் அருகருகே செயல்பட்டு வருகிறது. மக்கள் அதிக அளவில் வந்து போகும் இடமாகவும் உள்ளது. அந்த பகுதியில் பழுதடைந்த வாகனங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். --சேகர், கிஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22309

வீணாகும் தண்ணீர்

வீணாகும் தண்ணீர்தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அலேகிருஷ்ணாபுரம் இருந்து அலேலிங்கபுரம் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளை கிணற்றின் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. சாலையில் வெளியேறி வருவதால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை மூடி உரிய வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனியப்பன், அலேகிருஷ்ணாபுரம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22307

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டதுமின்சாரம்

கிருஷ்ணகிரி மாவடடம் சூளகிரி அருகே எர்ரண்டப்பள்ளி கிராமத்தில் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து இருந்தது. கிராமத்தின் மைய பகுதியில் உள்ள இந்த மினகம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22306

தெருநாய்களால் மாணவர்கள் அச்சம்

மற்றவை

தர்மபுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. பள்ளி செல்லும் மாணவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -கலைவாணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22305

சாலையோரம் குப்பைகளை கொட்டலாமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளி ஊராட்சி வெள்ளிசந்தையில் பாலக்கோடு- ராயக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், வெள்ளிசந்தை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22304

கால்வாய் தூர்வாரப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டனஅள்ளி கிருஷ்ணாபுரத்துப்பள்ளம் முதல் இண்டூர் மெயின் ரோடு வரை செல்லும் ஏரி கால்வாயில் ஏரிக்கொட்டாய் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. இதனால் ரோடு பழுதடைந்துள்ளது. எனவே இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கால்வாய் தூர்வாரி ஏரி நீர் செல்வதற்கு வழிவகை செய்யவேண்டும். -முத்து, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22303

ஆபத்தான குடிநீர் குழாய்

ஆபத்தான குடிநீர் குழாய்மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் குடிநீர் தொட்டிகள் மேல் சிமெண்டு சிலாப்புகள் மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக தொட்டியின் மேல் சிமெண்டு சிலாப்பு அமைத்து விபத்து நடப்பதை தடுக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22074

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே முட்டாஞ்செட்டி ஊராட்சியில் 14-வது நிதி குழு மானியத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 2 வருடங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -ரவி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick