Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Nov 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21840

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி காந்திநகர் 14-வது வார்டில் பட்டாளம்மன் கோவில் பின்புறம் சில நாட்களாக மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் அவர்களின் நலன் கருதி தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தி நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21839

அரசு பள்ளிகளில் ஆய்வு தேவை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி, கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் தொட்டி தினமும் பராமரிக்கப்படாததால் அதனை மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் முகம் சுழிக்கிறார்கள். நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரியப்பன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21838

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

சாலை

பர்கூர்- ஜெகதேவி ரோட்டில் சாலையின் இருப்புறமும் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பஸ்களும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21837

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி யூனியன் தேவசமுத்திரம் ஊராட்சி முல்லைநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேஷ், முல்லை நகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21835

பயன்படாத குடிநீர் தொட்டி

பயன்படாத குடிநீர் தொட்டிதண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா காரண்டப்பள்ளி ஊராட்சி சிக்கதிம்மன்தொட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொட்டி சில நாட்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21631

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றில் உயர்மட்ட தரைவழி பாலம் உள்ளது. அதில் ஒரு பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விளக்கு வெளிச்சத்தில் இரவு, அதிகாலை நேரங்களில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது 15-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பழுதாகி எரியாத நிலையில் உள்ளன. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் பழுதான மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -நவலடி, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21630

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பாச்சல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருந்து நாமக்கல், ராசிபுரம் செல்ல சரியான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே நகர பேருந்து ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, பாச்சல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21629

தாழ்வாக செல்லும் மின்கம்பி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது. அந்த நூலகத்தில் இருந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு மின்சார கம்பி மிக தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் செல்வோர் மீது மின்கம்பி மீது உரசி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின்சார கம்பியை உயர்த்தி அமைக்க வேண்டும். -பாபு, மின்னாம்பள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#21628

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த மும்முடி யூனியன் அலுவலகம் அருகில் ஜவுளிக்கடை எதிரில் வீரனூர் செல்லும் சாலையின் வளைவு பகுதியில் சாலை மழையால் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தர், தலைவாசல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#21627

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி இரும்பாலை எதிரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் குப்பைகள் மழைநீரில் அடித்து சென்று சாலையில் பரவி கிடக்கிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கார்த்திகா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21595

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை போட்டு குப்பை தொட்டிக்கு தீ வைத்து துப்புரவு பணியாளர்கள் எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக புகைமூட்டம் ஏற்படுகிறது. இந்த சாலை வழியே செல்லும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தமிழ்ச்செல்வி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21593

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரை நெருப்பூரின் மையப்பகுதியில் சாலையின் நடுவே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். -சி.கார்த்திக், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick