Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Dec 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23000

பெயர் பலகையை சரி செய்வார்களா?

பெயர் பலகையை சரி செய்வார்களா?மற்றவை

தர்மபுரி மாவட்டம் அ.பள்ளிபட்டியில் போலீஸ் நிலையம் அருகே அரூர்- சேலம் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகை தலைகீழாக தொங்கியவாறு உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயரை அறிந்து கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மாற்று வழியில் சென்று விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரி செய்து வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். -ராமலிங்கம், தர்மபுரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22995

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அப்துல்கரீம் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் மின்கம்பம் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நதீம்கான், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22797

கால அட்டவணை வைக்கலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் 4 ரோடு சந்திக்கும் சாலை உள்ளது. அங்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டைம் கீப்பர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு போக்குவரத்து அதிகாரிகள் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் உரிய நேரத்தில் வருகின்றனவா? என்று சோதனை செய்வதுண்டு. இந்த அலுவலகத்தில் பஸ்கள் வெளியூர்களில் இருந்து வரும் நேரம், ஆண்டகளூர்கேட்டில் இருந்து பஸ்கள் எந்த நேரத்தில் புறப்பட்டு செல்கின்றன என்ற கால அட்டவணை இல்லாமல் உள்ளது. எனவே டைம் கீப்பர் அலுவலகத்தில் பயணிகள் எளிதில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22796

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே புதன்சந்தையில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்கள் சந்தை வளாகத்திற்குள் நிறுத்த இடமில்லாததால் புதன் சந்தை நாமக்கல் பிரதான சாலையின் ஓரங்களில் நிறுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சந்தை பகுதியிலோ அல்லது அதன் அருகிலோ வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும். -பாலு, புதன் சந்தை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22795

சுகாதார கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் அரசு பள்ளி முன் பகுதியில் இறைச்சி கடைகள் இயங்கி வருகிறது. இதன் கழிவுகளை அருகிலேயே கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22793

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியில் இருந்து வனதுர்க்கை அம்மன் கோவில் ஏரி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தூரம் மின் விளக்குகள் இல்லை. இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22792

குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பள்ளத்தாதனூர் கிராமம் இந்திரா நகர் காலனி பகுதியில் மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின் மோட்டாரை விரைந்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - விமல்குமார், பல்லத்தாதனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22791

காம்பவுண்டு சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா நாவலூரில் இருந்து வீரகனூர் செல்லும் சாலையில் விவசாய பயன்பாட்டிற்கு கிணறுகள் அமைத்துள்ளனர். அந்த கிணறுகளில் காம்பவுண்டு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் கிணறுக்கு அருகில் செல்வோர், வாகனங்களில் வேகமாக செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கிணறுகளுக்கு காம்பவுண்டு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், தலைவாசல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22790

திறக்கப்படாத கழிவறை

கழிவுநீர்

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி மஜ்ரா கொல்லப்பட்டியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர். இங்கு பொதுகழிப்பிடம் கட்டி 10 வருடங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த கழிப்பறையை சீரமைத்து உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22775

விபத்து அபாயம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில் 70-கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு மின்சார கம்பத்திலிருந்து மட்டும் 50க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் செல்கின்றன. இதனால் காற்று வீசும் போதும் மழை பெய்யும் நேரங்களிலும் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கடுதல் மின் கம்பம்கள் அமைத்து மின் இணைப்புகள் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22773

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசுதொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இல்லை. இதனால் மாணவர்கள் பஸ் படிகளில் ஆபத்தை உணராமல் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி கூடுதல் பஸ்களை இயக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22772

ஆபத்தான கட்டிடம்

மற்றவை

ஓசூர் அருகே பாலிகானப்பள்ளி கிராமத்தில் கடந்த 1999-2000 ஆண்டுகளில் தமிழக அரசால் இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் அப்பகுதி பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோபால், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick