Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Nov 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22771

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையம் செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துக்களிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜன், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22770

பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு சந்தை பகுதியில் சமுதாய சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டது. இந்த சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். எனவே இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், மானியதஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22769

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பேளாரஅள்ளி கிராமத்திலும் அதனை சுற்றியும் 10-கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்வோர் பஸ்களில் சென்று வந்தனர். ஆனால் சில மாதங்களாக இந்த கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனியம்மாள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22764

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் 2 உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வெளியே நடமாடவும் அச்சப்படுகின்றனர். எனவே இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளயைும் எரிய செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வேல்முருகன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22760

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி 13-வது வார்டில் உள்ள 7, 8, 9-வது குறுக்கு தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் குறைந்த மின்னழுத்தம் கொண்டதாக இருப்பதால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே மின்சாரதுறை அதிகாரிகள் இந்த பிரச்சினையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கமலக்கண்ணன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22507

இருக்கை வசதி தேவை

இருக்கை வசதி தேவைமற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் செம்மேட்டில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்திற்கு வரும் மலைவாழ் மக்கள் நுழைவு வாயில் பகுதியில் உட்கார இடம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள புல்வெளிகளில் அமருகின்றனர். எனவே அங்கு வரும் மலைவாழ் மக்களுக்கு இருக்கை அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -அக்னி முருகேசன், செம்மேடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22506

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருந்து வளையபட்டி செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்து ரோடு சேதமானது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் மண் கொட்டி சரி செய்யப்பட்டது. தார் சாலையின் மண்கொட்டப்பட்ட பகுதியில் மட்டும் மண் உள்ளதால், அந்த பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக மணலில் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாத நிலையில் உள்ளது. எனவே அந்த சிறிய பகுதி மட்டும் உடனடியாக தார் சாலையாக அமைக்க சம்பந்தப்பட்டதுறையினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22505

தெருவை சூழ்ந்த ஏரிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த செண்பக மகாதேவி கிராமம் ஆதிதிராவிடர் தெரு அருகே ஏரி அமைந்துள்ளது. தற்போது பெய்த மழையால் ஏரி நிரம்பி வழிந்து ஓடுகிறது. இந்த ஏரியில் 2 மதகுகள் இருந்தும் அடைபட்டு இருப்பதால் அந்த தெரு முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் தெருவில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -க.அசோகரத்தினம், செண்பகமாதேவி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22504

புதுச்சத்திரம் வராத தனியார் பஸ்கள்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தனியார் பஸ்கள் புதுச்சத்திரம் ஊருக்குள் செல்லாமல் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தனியார் பஸ்கள் புதுச்சத்திரம் ஊருக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22503

விபத்து ஏற்படும் அபாயம்

மற்றவை

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 3 குப்பை வண்டிகள் உள்ளன. இந்த 3 குப்பை வண்டிகளை ஓட்டுவதற்கு டிரைவர் இல்லை. துப்புரவு பணியாளர்களே குப்பை வண்டியை ஓட்டி சென்று குப்பைகளை அள்ளுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் பயத்துடனே சாலையில் செல்ல வேண்டி இருக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து நல்ல பயிற்சி பெற்ற டிரைவர்களை பணியில் அமைர்த்த வேண்டும். -ராஜகோபால், வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#22502

சாலை பணி முடிக்கப்படுமா?

சாலை பணி முடிக்கப்படுமா?சாலை

சேலம் மாவட்டம் தாரமங்கலம்- சங்ககிரி மெயின் ரோட்டில் மாணவர் விடுதி எதிரே சாலை விரிவாக்க பணிக்காக பாதி அளவு தோண்டிய நிலையில் மக்கள் போராட்டத்தினால் கைவிடப்பட்டது. அதை தடுப்பு கூட வைக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#22501

அடிக்கடி விபத்து

சாலை

சேலம் மேச்சேரி பஸ் நிலையத்தில் தர்மபுரி மெயின் ரோட்டில் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த சாலையின் நடுவே குறைந்த உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் முன்னறிவிப்பை ஏற்படுத்தும் பலகை இல்லாததும், அந்த இடத்தில் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம். இருபுறமும் சாலையை ஆக்கிரமிப்பு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரித்து, முன்னறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick