Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Dec 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23020

பள்ளி அருகில் விஷ பூச்சிகள் நடமாட்டம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் பின்புறம் அதிக அளவில் செடி, கொடிகள் வளர்ந்து காட்சி அளிக்கிறது. அதனால் கொசுக்கள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும். -ராசாப்பன், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23019

போலீசார் ரோந்து

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்- குமாரபாளையம் மெயின் ரோட்டில் அரசங்காட்டு மேடு பகுதியில் 3 அங்கன்வாடி பள்ளிகள், ஒரு ரேஷன் கடை உள்ளன. அதன் அருகிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் அந்த பகுதியில் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். அவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுப்பார்களா? -மாணிக்கம், அரசங்காட்டு மேடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23018

தண்ணீர் வசதி தேவை

தண்ணீர்

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் 11-வது வார்டில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்ைல. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்்கு உள்ளாகிறார்கள். அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சுகாதார வளாகத்தை சீரமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -ஆனந்த், பி.நாட்டாமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23017

குடிநீா் குழாய் வால்வு சரிசெய்யப்படுமா?

தண்ணீர்

ஓமலூர் தாலுகா காமலாபுரம் கிராமம் தனியார் பள்ளியின் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் கேட் வால்வில் இருந்து தண்ணீர் கசிகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜோசப், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23016

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் களரம்பட்டி மெயின் ரோடு புத்து மாரியம்மன் கோவில் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் போது அவைகள் கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -ரவிராஜன், நெல்லுக்குத்திபாறை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23015

தெருவிளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் ஊராட்சி மூக்கிரகாளியம்மன் கோவிலில் இருந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். -செந்தில்குமார் வீராணம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23014

மின்விளக்கு வசதி தேவை

மின்சாரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா தோரமங்கலம் கிராமத்தில் உள்ளது போடயந்தெரு. இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை, இதனால் மலையாம்பாளையம் முதல் போடயந்தெரு வரை சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்ப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும். -முருகன் போடயந்தெரு, மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23012

சீரமைக்கப்பட வேண்டிய சாலை

சாலை

ஓசூர்- தளி நெடுஞ்சாலையில் அந்திவாடி கூட்டுரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரஸ்வதி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23010

சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் ரெயில் பாலம் அருகே சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலை, எப்போதும் பரபரப்புடன் காணப்படும். சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவலிங்கம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23009

மாசடைந்த கிணறு

மாசடைந்த கிணறுமற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரி பெருமாள் கோவில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்று பாழடைந்து உள்ளது. இதில் தேங்கியுள்ள தண்ணீரில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீர் மாசடைந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை மூட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். -முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23008

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளை தெரு நாய்கள் தொல்லையால் அவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், பாலக்கோடு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23006

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் கேத்துரெட்டிபட்டி- பொம்மிடி சாலையில் உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. சாலை ஓரம் இருக்கிற பாலங்கள் மீது பொதுமக்கள் அமர்ந்தாலும், அப்பகுதியில் சென்றாலும் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பிகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், பாப்பிரெட்டிப்பட்டி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick