Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#23200

சாக்கடை கால்வாய் விரைந்து முடிக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் 11-வது வார்டு பொன்னமாபேட்டை தில்லை நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முதல் பொன்கணபதி கோவில் வரை உள்ள சாலையில் சாக்கடை கால்வாய் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாததால் சாலை முழுவதும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#23199

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமம் பொன்னம்பாளையத்தில் 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பஞ்சாயத்து அலுவலகம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'்க்கும் பாராட்டு.. -அருள், பொன்னம்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23193

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23192

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக அனுமதி இல்லாமல் சரக்கு லாரிகள் நிற்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பஸ்கள் தவிர பிற வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாராயணசாமி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23186

மூடப்படாத கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சி பகுதியில் உடையார் குடியிருப்பு தெருவில் குடியிருப்புக்கு நடுவே பயன்பாட்டில் இல்லாத பொது கிணறு மூடப்படாமல் உள்ளது. இந்த கிணற்றை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதனால் இங்கு வசிக்கும் குழந்தைகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே கிணற்றின் மேற்பகுதிக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23184

ஆமை வேகத்தில் கட்டிட பணி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ரெட்டியூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அங்கன்வாடி மையம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு அரசு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23182

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே முருகன் கோவில் உள்பட சில இடங்களில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நாகராஜ், ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23181

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சாக்கடை கால்வாய்களை அடைத்து அதன் மேல் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் தேங்கி தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23179

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சந்தகவுண்டனூர் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை முறையாக சுத்தப்படுத்தாமல் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23178

சேறும், சகதியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து அரியனப்பள்ளி கிராமம் வழியாக குப்பம் செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து உள்ளது. மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23022

தெருநாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை

சேந்தமங்கலம் அரசமரம் பஸ் நிறுத்தம் அருகில் அடிக்கடி 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுத்து தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வம், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23021

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ஆதவ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick