Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Dec 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23446

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டு பஞ்சப்பள்ளி சாலையில் கழிவுநீர் வெளியேற்றப்படாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இதில் கொசுக்கள் உற்பத்தி ஆகி இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்ற பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -வேலன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23445

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுட்ரெண்டிங்

தர்மபுரி மானிதஅள்ளி ஊராட்சி ஜருகு சந்தை பகுதியில் புதிய சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளது. எனவே சமுதாய சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் புதிய சமுதாய சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23441

போக்குவரத்து நெரிசல்

சாலை

ஓசூர் மாநகர வீதிகளில் குறிப்பாக உழவர் சந்தை சாலை, பாகலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பசுமாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் முக்கிய வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -விஜயேந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23440

பன்றிகள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம், அகசிப்பள்ளி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதிகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிகளில் உள்ள குட்டைகளில் இறங்கி சுற்றித்திரிகின்றன. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23438

எச்சரிக்கை பலகை அவசியம்

சாலை

கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியில் எந்தவிதமான எச்சரிக்கை பலகையும் இல்லாமல் 2 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் இரு சக்கர வாகனங்கள், லாரி மற்றும் பஸ்கள் திடீரென பிரேக் போடுவதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடை அருகே எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாதுரை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#23436

பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து எலத்தகிரி, கந்திகுப்பம் வழியாக பர்கூர் வந்து இங்கிருந்து ஜெகதேவி, அண்ணாசிலை, அத்திக்கானூர் வழியாக போச்சம்பள்ளி வரை அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது. அந்த டவுன் பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த பஸ்களில் சென்று வந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மீண்டும் டவுன் பஸ்சை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கிருஷ்ணா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23212

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ளது சிங்கிலிபட்டி கிராமம். இங்கிருந்து வகுரம்பட்டி செல்லும் தார் சாலை 1½ கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், முதியோர்களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23210

சுகாதார கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே இரவு நேரங்களில் மதுபிரியர்கள் குடித்துவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை போட்டுவிட்டு செல்கின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இப்பகுதியில் மது அருந்துபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23209

ஆடுகள் விபத்தில் சிக்கும் அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாற்று பாதையில் அங்குள்ள வனப்பகுதியில் மலைவாழ் விவசாயிகள் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அவைகள் மாற்றுபாதை சாலையில் படுத்துக் கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், ஆடுகளும் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலுசாமி, முள்ளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23208

நிழற்கூடம் அவசியம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலையம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் அங்கிருந்த 2 நிழற்கூடங்களை அப்புறப்படுத்திவிட்டனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவிகளும் வெயிலில் நீண்ட நேரம் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும். -மாதேஷ், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#23206

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் இந்தியன் வங்கி காலனியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பன்னீர்செல்வம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23201

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

சேலம் 33-வது வார்டு தம்பி காளியம்மன் கோவில் தெருவில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விஸ்வநாதன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick