Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Feb 2023 4:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27193

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி ஊராட்சி வெள்ளிச்சந்தை மெயின் ரோடில் இருந்து எம்.செட்டிஅள்ளி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பன்னீர்செல்வம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27192

விபத்துகளை தவிர்க்க வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை 4 ரோட்டில் தடுப்பு சுவர் பகுதிகளில் குவியல் குவியலாக மண் சேர்ந்துள்ளது. இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலை முழுவதும் படர்ந்துள்ள மண் மற்றும் அதிலிருந்து வரும் மண் துகள்களால் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் சென்டர் மீடியனில் எந்தவித பெயிண்டு மற்றும் ஒளி பிரதிபலிப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் மண்ணை அகற்றி எச்சரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27191

பயன்பாடு இல்லாத அரசு கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தக்காளி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட இதர அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையம் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இவை விவசாயிகளுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகளின் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர்மண்டியும், உபகரணங்கள் துருப்பிடித்தும் காணப்படுகிறது. எனவே மாவட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27190

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் பத்திரஅள்ளி ஊராட்சி பூச்சூர், ஆரல்குந்தி, புளியமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களுக்கு கட்சி வர்ணம் பூசி உள்ளனர். அரசு மின்கம்பங்களில் கட்சி பதாகைகளை கட்டி, அந்த மின்கம்பங்களுக்கு கட்சி வண்ணங்களை தீட்டி உள்ளனர். எனவே இவ்வாறு மின்கம்பங்களில் வர்ணம் பூசுவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவி, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27189

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கண்ணன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27188

கம்பிவேலி அமைக்க கோரிக்கை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் மிகவும் பழமையான ஏரி, சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. ஏரியை சுற்றிலும் பக்கவாட்டில் விபத்து ஏற்படாமல் இருக்க இரும்பிலான தடுப்பு பலகைகளை பொருத்தி உள்ளனர். அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏரியை சுற்றி சுமார் 5 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைத்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இதனை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27187

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ்நகர் பைபாஸ் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு சாலையின் ஒருபுறத்தில் மட்டும் அகற்றப்பட்டது. மறுபுறம் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலையில் கடை வைத்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27185

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கோட்டப்பட்டியில் புலியூர் மற்றும் மேட்டுப்புலியூர் பஸ் நிறுத்தங்கள், ஏரிக்கரை பகுதிகளில் ஆங்காங்கே வேகத்தடைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இந்த விபத்துகளை தடுக்க அந்த பகுதிகளில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நடராஜன். கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26962

வாய்க்காலை சூழ்ந்த ஆகாயத்தாமரை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி வாய்க்காலில் தற்போது குறைந்த அளவிலான தண்ணீர் செல்கிறது. இதில் ஆகாயத்தாமரை வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. அந்த வாய்க்காலில் துணி துவைக்க மற்றும் மீன்பிடிக்க பொதுமக்கள் அடிக்கடி சென்று வருவார்கள். இதனால் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் படர்ந்த ஆகாயத்தாமரைையை அகற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.-செல்வராஜ் அக்கியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26961

வேகத்தடை அவசியம்

சாலை

நாமக்கல் 24-வது வார்டு சேலம்-ஈரோடு புற வழி சாலை உழவர் சந்தையில் இருந்து நெடுஞ்சாலை வரை இந்த வார்டு வழியாக செல்கிறது. இந்த சாலையில் பஸ் மற்றும் லாரி, கார்கள் வேகமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செல்கிறது. மேலும் இந்த சாலையில் நிறைய இணைப்பு சாலை உள்ளது. எனவே இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாலையில் வேகத்தடை அமைத்து வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.சதீஸ்குமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:06 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26960

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பச்சுடையாம் பாளையம் கிராம சாலையில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலை வழியாக பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இரண்டு சக்கர வாகனங்களில் விவசாயிகள் விலை பொருட்களை கொண்டு செல்லும்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் இரண்டு சக்கர வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயனடையச் செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 3:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26951

சாலையில் தொலைபேசி கம்பம்

சாலையில் தொலைபேசி கம்பம்சாலை

சேலம் 6-வது வார்டு ராம் நகர் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள பழுதான தொலைபேசி கம்பத்தை அகற்றாமல் ரோடு போட ஜல்லிகற்களை பரப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தொலைபேசி கம்பத்தை அகற்றி சாலை அமைக்க வேண்டும்.-சேகர், ராம் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick