Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27359

சாலையில் பெரிய பள்ளம்

சாலையில் பெரிய பள்ளம்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-காரக்குப்பம் செல்லும் சாலையில் காரக்குப்பம் என்ற இடத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருணாகரன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27358

பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. பயணிகளின் நலன்கருதி, புறநகர் பஸ்களும், இந்த பஸ் நிலையம் வழியாக வந்து செல்ல வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, நல்லம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் அரசு மற்றும் தனியார் புறநகர் பஸ்களும் வந்து செல்லும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.விமல், நல்லம்பள்ளி, தர்மபுரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27357

ஆபத்தான தரைப்பாலம்

ஆபத்தான தரைப்பாலம்சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் அருகே நீண்ட காலமாக குறுகிய தரைப்பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் தரைப்பாலம் மிகவும் குறுகியதாக, ஆற்று பாசன கால்வாய் செல்வதாலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பாலக்கோட்டில் இருந்து 4 ரோடு பிரிவு சாலை, புதூர் மாரியம்மன் கோவில், பேளாரஅள்ளி, எலங்காலப்பட்டி, பெரியாம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் முன்பு ஆபத்தாக உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27356

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 5-வது வார்டில் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27207

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்திபுரம் மாதா கோவில் வரை உள்ள பிரதான சாலையின் இருபுறங்களிலும் கடைகள், குடியிருப்புகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் பஸ், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் அவ்வழியே வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ஜெயபால், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27206

செடி, கொடிகள் அகற்றப்படுமா ?

மற்றவை

நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த எஸ்.வாழவந்தியில் உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் காற்று வேகமாக வீசும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் மேய்ந்து வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஸ்வரன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27205

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் ஆட்டோவில் ஆபத்தான பயணம் மேற்கொள்கினறனர். இதனால் சில வாரங்களுக்கு முன்பு இதுபோன்று ஆட்களை ஏற்றி சென்றதால் ராசிபுரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 10-கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதி மக்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.-சந்தோஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27204

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வேப்பிலை குட்டை கிராமத்தில் எல்லை கருப்பு கோவில் உள்ளது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு 4 சாலைகள் இணையும் இடத்தில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.-சின்னராசு, வேப்பிலைகுட்டை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27203

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா ?

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 56-வது வார்டு வடக்கு முனியப்பன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இங்கு குப்பைகளைஅகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.-பிரபு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#27202

வீடுகளுக்கு மின் இணைப்பு

மின்சாரம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அழகனூர் மேட்டுக்காட்டில் 100 வீடுகளும், தறி பட்டறைகளும் உள்ளன. இங்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பு டிராஸ்ன்பார்மர் அமைக்கப்பட்டது. இதுவரை மின் கம்பம் அமைக்காததால் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே மின் கம்பம் அமைத்து உடனடியாக மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன். அழகனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#27201

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

சேலம் அனைமேடு ெரயில்வே கேட் முதல் பொன்னமாப்பேட்டை ெரயில்வே கேட், வாய்க்கால்பட்டரை வரை உள்ள பிரதான சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு மற்றும் கேபிள் பதிப்பு போன்ற பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. அவை மூடப்பட்டு சாலை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெங்கடேஷ், ஜெ.பொன்னமாப்பேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#27200

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் குப்தாநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜான், குப்தா நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick