Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Feb 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27608

பயணிகள் அவதி

போக்குவரத்து

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தின் உள்ளே பயணிகள் உட்காருவதற்காக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திறற்கு வரும் பயணிகள் உட்கார இடம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள இந்த இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-செல்வம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27606

கட்டிடம் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி ஊராட்சி எக்லேரியன் கொட்டாய் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சிறிது நாட்களுக்கு பிறகு அது நிரந்தரமாக மூடப்பட்டு குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பயன்படுத்த ஏதுவாக சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27386

குண்டும், குழியுமான சாலை

சாலை

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகர வங்கி தெரு, பூக்கடை வீதி வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றனர். இந்த சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். அப்படி வரும் வயதானவர்கள் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே பூக்கடை வீதி மற்றும் நகர வங்கி தெருக்களின் சாலைகளை உடனடியாக சீர் செய்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27385

வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அளவாய்பட்டி பகுதியில் முனியப்பன் கோவில் முதல் நடுப்பட்டி செல்லும் சாலை வரை புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதில் புதிதாக 6 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விழுந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து வெள்ளை வர்ணம் பூசி விபத்து இல்லாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27383

விபத்து ஏற்படுத்தும் சருகுகள்

சாலை

கோடை காலம் தொடங்கியதையடுத்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் சாலையோர மரங்களில் இருந்து உதிரும் சருகுகள் சாலையில் பரவி கிடக்கின்றன. அந்த வழியாக சென்று வரும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த சருகுகளை அவ்வப்போது சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27382

புதுப்பிக்க வேண்டிய சாலை

புதுப்பிக்க வேண்டிய சாலைசாலை

நாமக்கல் 12-வது வார்டு மெயின் ரோட்டில் உள்ள தேவேந்திரபுரம் சாலை அமைத்து 12 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து புதிதாக சாலை அமைக்க முன் வருவார்களா?-ஜெகன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27380

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி- பழையூர்சத்திரம் இடையே உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27378

சாலையில் பள்ளம்

சாலை

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் போது ஏற்காடு மலைப்பாதையில் சில இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.-பவுன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27376

பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்கா

பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்காபூங்கா

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி மெயின்ரோடு மேச்சேரியில் புதியதாக அமைந்துள்ள சிறுவர் பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சிறுவர் பூங்காவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரா.சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27362

சாலையோரம் குப்பை

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகே சர்வீஸ் ரோடு ஓரத்தில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது குப்பைகள் காற்றில் பறந்து மேலே விழுகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, அந்த குப்பைக்கூளங்களை நாள்தோறும் அகற்றி, அந்த பகுதியை தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-சங்கர், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27361

புழுதி பறக்கும் சாலை

புழுதி பறக்கும் சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டியில் இருந்து புதூர் செல்லும் சாலை வழியாக பெருமாள் குப்பம், படப்பள்ளி, அம்பேத்கர் நகர், கஞ்சனூர், புதுக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சென்று வர வேண்டும். இந்த சாலை குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. மேலும் கார், வேன் செல்லும் போது சாலையில் புழுதி பறந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதிகாரிகள் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.-கண்ணாயிரம், வெங்கடதாம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27360

பாதியில் நிற்கும் சாலை பணி

பாதியில் நிற்கும் சாலை பணிசாலை

கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி சத்யசாய் நகர், பாலாஜி நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பணி அரைகுறைவாக நடைபெற்று கிடப்பில் போடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதனால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும்.-ரவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick