Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Feb 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27648

குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா ?

குப்பை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சி எருமப்பட்டியில் இருந்து முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் இரண்டு அரசு மதுபான கடையில் உள்ளன. இங்கு மது பிரியர்கள் அங்கேயே வாங்கி நகர்ந்துவிட்டு அங்கு செல்லும் கால்வாயில் மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-ராஜேஷ், எருமப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27647

குரங்குகள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் சித்தர் கோவில் வனப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவு தேடி அத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் கிழங்கு மில்களுக்குள் புகுந்து உணவு தேடி பொருட்களை நாசம் செய்கின்றன. மேலும், ராசிபுரம் ஆட்டையாம்பட்டி பிரதான சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் துரத்துகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் வட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27646

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சியில் சுமார் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டி 2 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனி, தலைவாசல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27644

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் 46-வது வார்டு குகை பகுதியில் உள்ள நரசிங்கபுரம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பல தெருக்களில் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை துர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சஞ்சீவ், குகை, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#27643

புதிய வகுப்பறை கட்டப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் சமையல் கூடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.-குருபாலன், மஜ்ராகொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#27641

பயன்பாடு இல்லாத சந்தை

மற்றவை

சேலம் மாவட்டம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்திற்கு அருகே பழைய சூரமங்கலம் பகுதியில் வியாழன்தோறும் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தை சாலையையொட்டி கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாழன் சந்தை செயல்படுவதற்காக அருகிலேயே 25-க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து காய்கறிகள் விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் கட்டிடம் அமைத்துள்ளது. ஆனாலும் இந்த கட்டிடத்தில் வியாழன் சந்தை நடைபெறுவதில்லை. எனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27627

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு துப்புரவு பணியாளர்கள் யாரும் இல்லாததால் அலுவலகம் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை முறையாக சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜாராம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27621

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து பிடமனேரி ஏரிக்கரை ரோடு தனியார் பள்ளி அருகில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிககை எடுப்பார்களா ?-சுரேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27616

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் எம்.செட்டிஅள்ளி ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-மாரியப்பன், எம்செட்டி அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27614

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே தமிழ்நாடு மீன் வளத்துறை சார்பில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் மீன்களை பொது மக்கள் இங்கேயே சுத்தம் செய்து எடுத்து செல்கின்றனர். மேலும் கழிவுகளை இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கொட்டுவதால் சாக்கடை நீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.-கணேஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27611

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா ?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலையில் வேலம்பட்டி மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. இந்த வேக தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமலல் உள்ளது. இதனால் புதியதாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். இந்த வேக தடைகளில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வேகத்தடையில் வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27609

மின் இணைப்பு வழங்கப்படுமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டு கரீம் சாகிப் தெருவில் ஒரே மின்சார கம்பத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதனை சரி செய்ய புதியதாக மின்கம்பம் 6 மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இதுவரை மின் இணைப்புகள் கொடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை நட்டு மின் இணைப்புகளை வழங்க வேண்டும்.-பசுபதி, பர்கூர், கிருஷண்கிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick