Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 April 2024 5:58 PM GMT
Mr.Nagarajan | குமாரபாளையம்
#46214

சுகாதார நிலையம் தேவை

மற்றவை

குமாரபாளையம் கத்தேரி பிரிவு சாலையில் தட்டான்குட்டை, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, வட்டமலை, எதிர்மேடு, வளையக்காரனூர், கள்ளிபாளையம், குளத்துக்காடு, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதி உள்ளன. இந்த பகுதிகளில் விளையாட்டு மைதானமோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லை. எனவே இப்பகுதி மக்கள் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வர வேண்டியதாக உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விளையாட்டு மைதானம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 10
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 5:56 PM GMT
Mr.Nagarajan | சேந்தமங்கலம்
#46213

சாக்கடை வசதி

கழிவுநீர்

சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி கிராமம் பழனியப்பர் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளில் ஒன்றான சாக்கடை வசதி இல்லை. இதனால் தெருவின் சாலையோரம் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடும், நோய்பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -முருகேசன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 5:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46207

குடிநீர் வேண்டும்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில்மேடு பகுதியில் மருதம் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு முறையான குடிநீர் வசதி இல்லை. குடிநீரின்றி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுமன், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 5:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46205

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பஸ் நிலைய பணிகள் தொடங்கப்பட்டு இதுவரையில் பணிகள் முடிவடையவில்லை. இதனால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -விஜயகாந்த், குள்ளாத்திரம்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 5:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46191

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் எதிரில் முல்லை நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.. இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் பலரும் கீழே விழுந்து காயமடைகிறார்கள். மேலும் நாய்கடியாலும் பலரும் பாதிக்கப்படுகிறாார்கள். இரவில் கூட்டம், கூட்டமாக சுற்றக் கூடிய நாய்களால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 5:26 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#46186

எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை அருகேயும், கொல்லப்பள்ளி அருகேயும் மேம்பால கட்டுமான பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்வதற்காக மாற்று சாலை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களும், சாலை பணிகள் நடைபெறுவது தெரியாமல் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அந்த பகுதி முழுவதும் வெளிச்சமின்றி இருட்டாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, சாலை பணிகள் நடைபெறும் இடங்களில்...

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 5:23 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#46184

குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

ஓசூர்- பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகமது, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 6:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#46040

பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்குமா!

போக்குவரத்து

சேலத்தில் இருந்து தம்மம்பட்டி செல்லும் வழியில் பாலக்காடு கிராமம் உள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் பாலக்காடு பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் பாலக்காடு கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் சேலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி செல்ல வேண்டும் என்றால் கீரிப்பட்டி, முக்கோணம் அல்லது மல்லியக்கரை பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கல்லூரி மாணவ-மாணவிகளின் நலன் கருதி சேலத்தில் இருந்து தம்மம்பட்டி செல்லும் அரசு பஸ்கள் பாலக்காடு பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 19
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 6:07 PM GMT
Mr.Nagarajan | ஏற்காடு
#46039

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதி சுற்றுலா தலமாகும். ஏற்காடு ஏரியை சுற்றி நான்கு இடங்களில் பொது சுகாதார வளாகம் உள்ளன. இந்த சுகாதார வளாகங்கள் போதிய பராமரிப்பு இன்றி பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொது சுகாதார வளாகத்தை சீர அமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், ஏற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 5:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46037

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு தினசரி வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -சரண், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 12
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 5:53 PM GMT
Mr.Nagarajan | திருச்செங்கோடு
#46036

சாலையில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருச்செங்கோடு தாலுகா சக்திநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், குமாரமங்கலம் ஆகிய 3 கிராமங்கள் ஊராட்சியின் சந்திப்பு பகுதியாக உள்ளது. இந்தப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. முக்கிய இணைப்பு சாலையான இப்பகுதியில் சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் தேங்காத வண்ணம் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -விஷ்ணு, திருச்செங்கோடு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 5:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46033

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. தினமும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லும் இடம் என்பதால் சாக்கடை கால்வாயை தூர்வாரி, கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை வேண்டும். -மாதேஷ், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick