Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 May 2024
Mr.Nagarajan | தருமபுரி
#46548

சமூக விரோதிகளின் கூடாரமான பஸ் நிலையம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாமல் உள்ளன. ஆனால் இந்த கடைகளின் சட்டர் பூட்டப்படாமல் திறந்தபடியே உள்ளன. எனவே சமூக விரோதிகள் கடைகளின் உள்ளே சென்று மது அருந்துவதும், சூதாடுவதும் மேலும் பிற சமூக விரோத செயல்களுக்கும் பஸ் நிலையத்தின் உள்ள கடைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கடைகளை திறக்க நடவடிக்கை உடுக்க வேண்டும். -செம்பி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46543

நோய் பரவும் அபாயம்

குப்பை

கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை செல்லும் சாலையில் கிருஷ்ணகிரி அணை பகுதியான திண்ணகழனி அருகில் இறைச்சி கடைகளில் வெட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நீர் நிலைகள் அசுத்தம் அடைவதுடன், சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிமுருகன், திண்ணகழனி.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024
Mr.Nagarajan | பர்கூர்
#46536

கால்நடை மருத்துவமனை செயல்படுமா?

மற்றவை

பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனையில் டாக்டர்கள் சரிவர இருப்பதில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக அருகே உள்ள நகரத்திற்கு கூட்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை மருத்துவமனையை தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சக்தி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#46390

தடுப்பு கம்பிகள் சரி செய்யப்படுமா?

சாலை

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தடுப்பு கம்பிகள் சரிந்து கீழே விழந்து கிடக்கின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் நடைபாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்கின்றனர். எனவே, நடைபாதையில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கீழே விழுந்து கிடக்கும் தடுப்பு கம்பியை சரி செய்து வாகன ஓட்டிகள் செல்லாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வருண், சேலம்.

மேலும்
ஆதரவு: 56
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#46389

பூட்டியே கிடக்கும் சமுதாயகூடம்

மற்றவை

தாரமங்கலம் பேரூராட்சியாக இருந்தபோது பழைய 5-வது வார்டு எம்.ஜி.ஆர். நெசவாளர் காலனி குடியிருப்பு பகுதிக்கு அருகில் சமுதாயகூட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது பல ஆண்டுகள் ஆகியும் இந்த சமுதாய கூடம் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. ஏழை, எளிய மக்கள் குறைவான கட்டணத்தில் விசேஷங்கள் நடத்த கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். -கருப்பசாமி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | நாமக்கல்
#46385

நிழற்கூடம் வேண்டும்

மற்றவை

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. அங்குள்ள நுழைவாயில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிழலில் நிறுத்தும் வகையில் நிழற்கூடம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பு கருதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜோசப், செம்மேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | தருமபுரி
#46380

சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்

சாலை

தர்மபுரி குமாரசாமிபேட்டை பிரதான நெடுஞ்சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களில் சமீபகாலமாக அதிகளவில் கம்பிகள் ஏற்றி செல்லப்படுகின்றன. உரிய பாதுகாப்பின்றி ஆபத்தான முறையில் ஏற்றி செல்லப்படும் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கம்பிகள் மற்றும் அதிகளவில் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், தர்மபுரி

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | பென்னாகரம்
#46379

குண்டும், குழியுமான சாலை

சாலை

பென்னாகரம் ஒன்றியம் ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மாக்கனூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தார் சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக பூச்செட்டிஅள்ளி, மூக்கனஅள்ளி, ஆண்டியூர், பேடரஅள்ளி, சோளப்பாடி, தளவாய்அள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் டவுன் பஸ், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த...

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46375

செயல்படாத புறக்காவல் நிலையம்

மற்றவை

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையம் தற்போது செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, இந்த புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மாது, மிட்டப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46373

பூட்டியே கிடக்கும் குடிநீர் மையம்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக குடிநீர் மையம் பூட்டியே கிடக்கிறது. இந்த குடிநீர் மையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தற்போது கோடை காலத்தில் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பொதுமக்கள் நலன்கருதி திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், ஊத்தங்கரை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024
Mr.Nagarajan | பர்கூர்
#46371

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

பர்கூரில் இருந்து காரகுப்பம் செல்லும் சாலையில் அம்மேரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி சென்னை புறவழிச்சாலை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் உட்பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த ஒரு ஆண்டுகளாக எரிவதில்லை. இந்த சாலையை கடக்கும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எதிர்வரும் வாகனங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே வாகனங்கள் வருகின்றதா? என தெரியவருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் தாமதமின்றி மேம்பாலத்தின் உட்பகுதியில்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024
Mr.Nagarajan | மேட்டூர்
#46217

சேதமடைந்த ரேஷன் கடை

மற்றவை

மேட்டூர் தாலுகா ராமன் நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து, விரிசலுடன் காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறம் அதிக விரிசல்களுடன் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை புதுப்பித்து தருவார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். -செந்தில், சேலம்.

மேலும்
ஆதரவு: 46
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick