Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 April 2024 5:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46029

சேதம் அடைந்த கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு வாணியர் தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து உள்ளது. இந்த பகுதியில் குறுகிய வளைவு ஒன்று உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடக்கும் போது சாக்கடை கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ராமநாதன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 5:39 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#46026

ஆபத்தான மேம்பாலம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் மேம்பாலங்கள் அமைத்துள்ளன. இந்த மேம்பாலங்களில் ஒரு சில இடங்களில் பக்கவாட்டு சுவர்களில் அரச மரம் மற்றும் செடி வகைகள் முளைத்திருக்கின்றன. அதன் காரணமாக மேம்பால சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உடையும் ஆபத்தில் உள்ளது. இதனால் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால், பேரிடர் நடக்கும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -விஜய்,...

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 5:35 PM GMT
Mr.Nagarajan | வேப்பனஹள்ளி
#46023

வேகத்தடை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் சாலையில் இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் வேகத்தடையை சீர் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், குந்தாரப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 6:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#45879

அபாயகரமான குழி

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழி பிரதான சாலையாக உள்ளது. இந்தசாலையில் தினமும் ஏராளமான கார், பஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான குழி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். வாகனஓட்டிகள் தினமும் கீழே விழுந்து காயமடைகிறார்கள். ஏதேனும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -இனியவர்மன், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 6:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#45878

சுகாதார சீர்கேடு

குப்பை

தாரமங்கலம் பஸ் நிலையம் அருகில் பவளத்தூர் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையோரத்தில் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, தேவையற்ற கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தீனதயாளன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 6:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45877

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த மதியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சவுரிபாளையம் - மதியம்பட்டி செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், மதியம்பட்டி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 6:05 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45876

மின் மயானம் திறக்கப்படுமா?

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் மயானம் உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மின் மயானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -சண்முகம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 11
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 6:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45875

அபாய மின் ஒயர்கள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சோளக்காட்டில் வாரத்திற்கு 2 முறை சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு கொல்லிமலை முழுவதும் இருந்து மலைவாழ் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு மின்சார இணைப்பில் உள்ள ஒயர்கள் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் அறுந்து கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு யாரும் பாதிக்காத வகையில் அந்த மின்சார ஒயர்களை சரிப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். -மோசஸ், சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 10
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:47 PM GMT
Mr.Nagarajan | பென்னாகரம்
#45859

விதிமுறைகளை மீறும் வாகனங்கள்

போக்குவரத்து

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அரசின் கட்டுப்பாடுகளை மீறி, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, காவல்துறை அதிகாரிகள் இத்தகைய விதிமுறைகளை மீறும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பாஸ்கர், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#45854

பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் கடைக்குச் சென்று வர சிரமப்படுகின்றனர். அதனால் வணிக வளாக கடைகள் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணசாமி, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:43 PM GMT
Mr.Nagarajan | வேப்பனஹள்ளி
#45851

வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி எதிரே உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் அப்பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தடைக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரி, வேப்பனப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:41 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#45849

குடிநீர் குழாய் சரி செய்யப்படுமா?

தண்ணீர்

ஓசூர் புதிய ரெயில் நிலைய பாலம் கீழே சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் காட்சியளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, உடைத்த குடிநீர் குழாயை விரைந்து சரி செய்து தர வேண்டும். -வினோத், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick