Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2024 5:49 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49387

கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

பர்கூர்-கிருஷ்ணகிரி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கால்வாய் சேதமடைந்தும், அடைப்பு ஏற்பட்டும், கழிவு நீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தாமதம் இன்றி கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரியும், சேதமடைந்த நிலையில் உள்ள கால்வாயை சீரமைத்தும் தர வேண்டும். -செந்தில், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 5:47 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49385

போக்குவரத்து நெரிசல் தீருமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகே சேலம், சென்னை, பெங்களூரு என முக்கிய சாலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் பயணிகளை ஏற்றி உடனடியாக அங்கிருந்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஷியாம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 5:46 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49383

கூடுதல் டிரான்ஸ்பார்மர் வேண்டும்

மின்சாரம்

பர்கூர் அடுத்த காரகுப்பம் பகுதியில் ஒரே ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அமைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது என கூறப்படுகிறது. இதிலிருந்து செல்லும் மின் அழுத்தத்தின் நிலை குறைவாக உள்ளதால் மின்மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாத நிலை ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 5:45 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49382

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி அமைக்கப்பட்டு சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -தங்கராஜ், சிக்கமாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 5:43 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#49381

கால்வாய் அமைக்கலாமே!

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் கிராமத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத்தின் அடியில் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முறையான கால்வாய்கள் அமைக்காததால் மழைக்காலங்களில் தரைப்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்லும் போது வாகனங்கள் அவர்கள் மீது நீரை வாரி அடித்தபடியே செல்கின்றன. எனவே மாவட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:53 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#49203

கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!

போக்குவரத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உள்பட்ட கச்சராயனூர், கெண்டிநகர், வெள்ளாட்டுகாரனூர், மோட்டூர், ஆரிக்கவுண்டனூர், மாமரத்துக்காடு, கோவில்பட்டி, ஆட்டுக்காரனூர் ஆகிய ஊர்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மேச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படித்து வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை வேலைகளில், பள்ளிக்கு சென்று வர போதுமான பஸ் வசதி இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்களில் பள்ளி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:52 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#49202

கழிவுநீர் செல்ல வழியில்லாத அவலம்

கழிவுநீர்

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மாசிநாயக்கன்பட்டிலிருந்து அயோத்தியாப்பட்டணம்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் வரை சாக்கடை கழிவுநீர் கால்வாயில் செல்கிறது. அதற்கு மேல் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலைக்கு செல்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வழி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கழிவுநீர் செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -பாபு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:37 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49196

வேகத்தடை வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 65 கொண்டை ஊசி வளைவுகளை கடந்த பின்பு சோளக்காடு வளைவு பகுதியில் நாச்சியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் வழியிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த பகுதி பிரதான சாலையாக இருப்பதால் கோவிலுக்கு செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த கோவில் வளைவு பகுதியில் வேகத்தடை அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:36 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49194

பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கொல்லிமலையின் கிழக்கு பகுதி அடிவாரத்தில் ஒட்டடி பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் முத்துகாபட்டியில் இருந்து வழக்கமாக பெரியசாமி கோவிலுக்கு சென்று வரும் அரசு பஸ்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். எனவே கோவிலுக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:33 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49192

ஆபத்தான மின்பெட்டி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் செக்காரத் தெரு உள்ளது. இங்குள்ள ஒரு மின் கம்பத்தில் சுமார் 3 அடி உயரத்தில் குழந்தைகள் தொடும் வகையில் மிகவும் ஆபத்தான முறையில் மின் மீட்டர் சுவிட்ச் மற்றும் மின் இணைப்பு ஒயர்கள் வெளியே தெரியும் படி இரும்பு மின் பெட்டி திறந்த படி உள்ளது. எனவே அபாய நிலையில் சாலையோரம் உள்ள இந்த மின் பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -சுகேல், கந்தம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:32 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49191

தொடர் மழையால் சாலை அரிப்பு

சாலை

கொல்லிமலையில் உள்ள தெம்பலம் பஸ் நிறுத்தம் வழியாக அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் சமீப காலமாக தொடர் மழையால் அங்குள்ள சாலையோரம் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பிரதான சாலையாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்கள் அவ்வழியே அடிக்கடி சென்று வருகிறது. எனவே விபத்துகள் எதுவும் ஏற்படாத வகையில் சாலை அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை விரைந்து சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -புகழேந்தி, சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:23 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49186

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

இதே போல் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் இரவு நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களை துரத்திக்கொண்டே செல்கிறது. இதனால் பலர் வாகனங்களில் இருந்து தவறி விழுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick