Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Oct 2024 5:45 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50408

ஆபத்தான நிலையில் மின்கம்பி

மின்சாரம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம், கால்வேஅள்ளி ஊராட்சியில் உள்ளது கத்தேரி. இந்த பகுதியில் ஏரிக்கரை ஓரமாக மின்கம்பி ஆபத்தான நிலையில் செல்கிறது. அந்த வழியாக வரும் பொதுமக்கள் மீது திடீரென காற்று அடித்தால் மின்கம்பி விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் உயிர் இழக்கவும் நேரிடும் எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், கால்வேஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:09 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50248

சாலையில் பள்ளம்

சாலை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் இருந்து பூமிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் தினமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம், பள்ளமாக காணப்படுவதால் இந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, பூமிநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:08 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#50246

மின்விளக்குகள் இல்லை

மின்சாரம்

தாரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் செல்லும் மெயின் ரோடு நெடுஞ்சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை மின்விளக்குகள் இல்ைல. இதனால் இந்த பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே இந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சசி பைரவன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:04 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50244

பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

சேலம் அம்மாபேட்டை மெயின் ரோடு முதல் பட்டைக்கோவில் வரை செல்ல தற்போது பால பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணி மிகவும் மந்த கதியில் நடக்கிறது. இதனால் பழைய பஸ் நிலையம் வர வேண்டும் என்றால் மிலிட்டரி ரோடு வழியாக செல்ல வேண்டும். இதனால் கால தாமதமும், அலைச்சலும் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பால பணியை விரைந்து முடிப்பார்களா? -வேலாயுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:03 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#50243

ஊருக்குள் பஸ் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

தலைவாசலில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சர்வீஸ் சாலை வழியாக உள்ளே வரும்படி கோரிக்கை வைத்தோம். அப்போது மட்டும் அவர்கள் சம்மதித்து விட்டு பின்னர் மீண்டும் இந்த வழியாக வருவதில்லை. போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். -பொதுமக்கள், தலைவாசல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 6:11 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#50242

விரைந்து முடிக்க வேண்டிய சாலை பணி

சாலை

முத்தம்பட்டியில் மண் பாதை, சாக்கடை கால்வாய், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கிராம பஞ்சாயத்தால் 3 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இந்த வழியாக செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். மேலும் அங்கு விளையாடும் குழந்தைகள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். . இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:59 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50241

ரவுண்டானா அமைக்க வேண்டும்

சாலை

வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்கிறார்கள். ஒரு சில பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆட்டோ, சரக்கு வாகனங்கள் வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -தனசேகரன், வெள்ளை பிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:57 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50240

மதுப்பிரியர்களின் தொல்லை

மற்றவை

அளவாய்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் எதிரே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் வந்து செல்வார்கள். இங்கு மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதிக்கு விளையாட வரும் குழந்தைகள், நடைபயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அங்கு செல்ல முடியாத வகையில் மதுப்பிரியர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் கவனத்தில் கொண்டு இரவு நேரத்தில் அப்பகுதியில் ரோந்து நடத்தி பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:56 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50239

புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்சன்காடு பகுதியில் இருந்து கோம்பை காடு மலைப்பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தினமும் மலைப்பகுதியில் இருந்து கீழே சென்று வர வேண்டிய உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று பயின்று வருகின்றனர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் மற்றும் சைக்கிள் மூலம் செல்கின்றனர். இந்த சாலையில் செல்லும்போது தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:55 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50238

மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடி

மின்சாரம்

மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் சந்தைப்பேட்டை விநாயகர் கோவில் பின்புறம் மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. செடி, கொடிகள் மின்கம்பத்தில் படர்ந்து இருப்பதால் சில நேரங்களில் அந்த பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கம்பத்தில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -அசோக், பாலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:54 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50237

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

நாமக்கல் நகரில் மோகனூர் சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை சாலையோரம் இருபுறமும் நிறுத்தி செல்கிறார்கள். இவ்வாறு இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால், அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -ராஜா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:21 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50221

சீரமைக்க வேண்டிய தார்சாலை

சாலை

ஏரியூரில் இருந்து ஈச்சப்பாடி, சிடுவம்பட்டி வழியாக பென்னாகரம் செல்லும் தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை, அரசு பஸ்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். -மாதையன், நாகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick