Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Dec 2024 4:59 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#52254

கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

சேலம் தாதம்பட்டியில் சாமிநகர் உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது சாைலயில் ஓடும் நீர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சமீபத்தில் பெய்த மழைக்கு தற்காலிகமாக தண்ணீர் செல்லும் விதமாக கால்வாய் தோண்டப்பட்டது. எனவே அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கால்வாய்யை நிரந்தரம் செய்து அல்லிக்குட்டை ஏரிக்கு மழைநீர் செல்லும் படி வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார், தாதம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:56 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52251

பஸ் நிலையம் வேண்டும்

போக்குவரத்து

பஸ் நிலையம் வேண்டும்ஆத்தூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்லும் முள்ளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தமிழ்செல்வன், நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:53 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52250

வேகத்தடை அவசியம்

சாலை

நாமக்கல் நகரின் மைய பகுதியில் கடைவீதி உள்ளது. கடைவீதிக்கு பொருட்கள் வாங்க செல்வோர் குளக்கரை திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், இவர்கள் பிரதான சாலையை கடக்க கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் கடைவீதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் வருவோரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கடைவீதிக்குள் நுழையும் இடத்தில் வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும். -ரவிக்குமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:48 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52245

வாகன ஓட்டிகள் சிரமம்

போக்குவரத்து

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் பொது அதிக அளவில் மண் தூசிகள் பறக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலம் அமைக்கும் பணி ேமற்கொள்ளும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் தெளித்து பணிகளை ேமற்கொள்ள ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வேல், வெள்ளைபிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:47 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#52244

நுழைவாயில் சீரமைக்கப்படுமா?

மற்றவை

சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக நுழைவு வாயிலில் இரும்பிலான கேட் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனை தாங்கி பிடிக்கும் நுழைவாயில் சுவர் சேதமடைந்த உள்ளது. இதனால் அந்த சுவர், கேட் எப்போது விழுமோ? என்ற நிலையில் உள்ளது. எனவே ஒன்றிய அலுவலகத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பாதுகாப்பு கருதி அந்த நுழைவாயில் சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும். -சேரன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#52241

குண்டும், குழியுமான சாலை

சாலை

அத்தனூர் சித்தர் கோவில் பகுதியில் இருந்து சேலம், நாமக்கல் செல்லும் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் காணப்படும் மேடு, பள்ளங்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த இணைப்பு சாலையை புதுப்பிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரை, அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:43 PM GMT
Mr.Mohan | அரூர்
#52239

பாதியில் நிற்கும் சாலை பணி

சாலை

திருவண்ணாமலையில் இருந்து அரூர் செல்லும் வழியில் தானிப்பாடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்வதி முத்து, அரூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:42 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#52237

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி ஊராட்சி பெரியானூர் காலனியில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அச்சத்துடனே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மேலும் நிழற்கூடத்தின் பின் பக்க சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை இடித்து விட்டு புதிய நிழற்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெரியசாமி, புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:40 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52236

பக்தா்கள் சிரமம்

மற்றவை

கிருஷ்ணகிரி அருகே கணவாய்ப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேல்தளங்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் கோவிலின் உள்ளே ஒரு சில இடங்களில் நீர் கசிந்து வடிகிறது. இதனால், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமம் அடைகிறார்கள். இதே போல், குரங்குகள் தொல்லையும் கோவிலில் அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்து சமய அறிநிலையத்துறை அலுவலர்கள் கோவிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குரங்குகளின் தொல்லையும் கட்டுப்படுத்திட வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:39 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#52235

ஆபத்தான வளைவு

சாலை

ஓசூர் ஓம் சாந்தி நகரில் இருந்து மத்தம்கிராமத்திற்கு செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலம் ஆபத்தான வளைவு பகுதியில் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பாலத்தின் இருபுறங்களிலும் சுவர் எழுப்பி தர வேண்டும். -சூர்யா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:37 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#52233

மதுப்பிரியர்களின் கூடாரம்

மற்றவை

பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி சிந்தகம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அப்பகுதியிலேயே வீசி செல்கின்றனர். மேலும் அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியும் இல்லை. இரவு நேரங்களில் இந்த பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாக உள்ளது. எனவே கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேணடும். -வேந்தன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:36 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#52232

விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து

பர்கூர் ஜெகதேவி ரோடு மற்றும் திருப்பத்தூர் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கும், இறைச்சி கடைகளுக்கும் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் இறைச்சி எடுக்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. -சிவராஜ், பா்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick