Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Jan 2025 1:23 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#52750

பேனர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பர்கூர் பஸ் நிலையத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளுக்கு மின் ஒயர்கள் செல்கிறது. இந்த கம்பத்தை ஒட்டி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை ஒட்டி உள்ள பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-புகழ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:22 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52749

விபத்து அபாயம்

போக்குவரத்து

தர்மபுரி நகரில் அதிக வாகன போக்குவரத்துக் கொண்ட இடமாக நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த சாலையின் மைய பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மின்விளக்கு முறையாக எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோருக்கு இரவு நேரத்தில் போதிய அளவில் வெளிச்சம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இரவு நேரத்தில் மின்விளக்குகள் முழுமையாக எரிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:21 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52748

ஆபத்தான பயணம்

மற்றவை

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது கனரக வாகனங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஆபத்தான வகையில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பெரிய அசம்பாவிதங்கள் நிகழும் முன் போலீசார் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -காவியநந்தன், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:20 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#52747

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

பென்னாகரம் 4 ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்கோபுர மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. தர்மபுரி-ஒகேனக்கல் பிரதான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எரியாத உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக சரிசெய்து எரிய செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-செல்வகுமார், முதுகம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:14 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#52618

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் ஆட்டையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக பணி முடிந்து வாகனங்களில் வருபவர்களையும், நடந்து வருபவர்களையும் துரத்தி சென்று கடிக்கிறது. எனவே இந்த வழியாக வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சங்கா், ஆட்டையாம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:13 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#52616

சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகள்

மற்றவை

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவின் முன் பகுதியில் சாக்கடை கால்வாயை மூடியுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து ஆபத்தான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் புதிதாக மருத்துவமனைக்கு வருவோர் பள்ளத்தில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சிலாப்புகளை நீக்கி விட்டு புதிய சிலாப்புகளை பொருத்த வேண்டும். -ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:11 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#52614

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

வாழப்பாடியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக அம்மாப்பேட்டை வழியாக பழைய பஸ் நிலையத்தை அடையலாம். ஆனால் மிலிட்டரி ரோட்டில் சாலை பணிகள் நடந்து வருகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திற்கு வருவதற்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து சாலை அமைக்கும் பணியை முடிப்பார்களா? -வேலாயுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:01 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52603

பகலில் எரியும் தெருவிளக்குகள்

மின்சாரம்

வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலை பகுதியில் உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருவிளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருக்கின்றது. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு இரவில் மட்டும் தெருவிளக்குகள் எரிய விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -தட்சணாமூர்த்தி, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:00 PM GMT
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#52600

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

முத்துகாப்பட்டி அருகே வேட்டாம்பாடி ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த ஏரி அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் கழிவுநீர் மற்றும் குவாரி மூலம் வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் தண்ணீர்் மாசடைந்து வருகிறது. தற்போது ஏரி முழுவதையும் ஆகாயத்தாமரைகள், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீரை ஏரியில் திறந்துவிடும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆகாயத்தாமரைகள், சீமைகருவேல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:58 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#52597

சுற்றுச்சூழல் மாசடைகிறது

குப்பை

திருச்செங்கோடு நகரின் மைய பகுதியான தெப்பக்குளம் அருகில் சந்தைபேட்டையில் பிளாஸ்டிக் கவர்கள், இதர கழிவுகளை மொத்தமாக கொட்டி எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகில் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா்களுக்கு மூச்சு திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குப்பைகளை எரிப்பதால் சாம்பல் முழுவதும் தெப்பக்குளம் நீரில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை எரிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52593

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நான்கு ரோடு பகுதியை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் இரு வேளைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். -பிரவீன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 4:51 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#52592

குண்டும், குழியுமான சாலை

சாலை

இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேப்பமரத்து கொட்டாய் பகுதியில் தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?. -ஞானசேகரன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick